Thursday, January 24, 2008

ஜனவரி 29ல் பூமியை கடக்கப் போகும் எரிகல்.



வாஷிங்டன்: வரும் 29ம் தேதி ஒரு பெரிய எரி கல் (asteroid) பூமியைக் கடந்து செல்ல உள்ளது.

600 மீட்டர் நீளமும் 150 மீட்டர் அகலமும் கொண்ட இந்த எரி கல் பூமியை 5,34,000 கிமீ தூரத்தில் கடந்து செல்லும். இந்த எரி கல்லுக்கு asteroid 2007 TU24 என பெயரிடப்பட்டுள்ளது.

வரும் 2027ல் தான் அடுத்த மிகப் பெரிய எரி கல் பூமியின் மிக அருகே வந்து போகும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. இந் நிலையில் இந்த எரிகல் பூமிக்கு அருகே வந்து போகவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தெரிவித்துள்ளது.

ஆனால், இது பூமியை மோத வாய்ப்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஜனவரி 29ம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.04 மணிக்கு இந்த எரி கல் கடந்து போவதை தொலைநோக்கியின் உதவியால் பார்க்க முடியும்.

இந்த எரிகல் பூமியை நெருங்குவதை அரிசோனா பல்கலைக்கழகத்தின் கேடலினா ஸ்கை சர்வே குழு தான் முதலில் கண்டறிந்தது.

சமீப காலத்தில் பூமியை மிக நெருக்கமாக கடந்து போன எரி கல் 2004 FU162 ஆகும். இது கடந்த 2004ம் ஆண்டு மார்ட் 31ம் தேதி 6,500 கி.மீ. தூரத்தில் கடந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் பூமியைக் கடந்த 2007 WD5 எரி கல் வரும் ஜனவரி 30ம் தேதி செவ்வாய் கிரகத்தை 26,000 கிமீ தூரத்தில் கடக்கவுள்ளது.

இந்த எரி கல் செவ்வாய் கிரகத்தின் மீது மோதவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Source:thatstamil.com

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 12:47 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க