Thursday, January 10, 2008

ரஷ்யா 7000 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனை.



7000 கிலோமீற்றர்கள் சென்று துள்ளியமாக இலக்குகளை தாக்கவல்ல ரஷ்சியாவின் RS-24 ஏவுகணை- பரிசோதனை வெடிப்பின் போது.

அண்மையில் அணுகுண்டினை விட சக்தி வாய்ந்த வெற்றிடக் குண்டினை (வாக்கொம் பொம்) வெற்றிகரமாக பரிசோதனைக்கு உட்படுத்திய ரஷ்யா, கடந்த வாரம் 7000ம் கிலோ மீற்றர்கள் சென்று (அதாவது பூமியை சுற்றி வரக்கூடிய தூரம்) இலக்கினை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணை இரண்டை பரிசோதனை செய்துள்ளது.

ஆர்.எஸ்.-24 என்ற முதல் ஏவுகணை 7000 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து, பசுபிக் பெருக்கடலுடன் அமைந்துள்ள அதன் ஹம்செற்கா மாகாணத்திலுள்ள வைக்கப்பட்டிருந்த இலக்கை சென்று தாக்கி அழித்துள்ளது.

இரண்டாவது ஏவுகணை ஆர்.எஸ்.எம்-54 ரஷ்யக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஹம்செற்கா மாகாணத்திலுள்ள இன்னொரு இலக்கை குறியாகக் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கியழித்ததாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவின் இப்புதிய ஏவுகணைகள் மூன்று அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் தாங்கிச்செல்லக்கூடிய சக்தி கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏவுகணைப் பரிசோதனை தொடர்பில் ரஷ்யா அதன் வரையறையை மீறி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதென அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கும் மத்தியில், இப்பரிசோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் காரணமாக, ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஐரோப்பாவில் அமைக்கப்போவதாக அமெரிக்கா கூறிவருகின்றது.

அத்துடன் ரஷ்யாவின் இந்த ஏவுகணைப் பரிசோதனை தமக்கு எவ்வித்திலும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டாதென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுஇவ்வாறிருக்க, ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுக்கு 300 வரையான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை 700 மில்லியன் டொலர்களுக்கு வழங்கியுள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் புதிய நவீன ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விரைவில் ரஷ்யா தமக்கு வழங்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மூன்று விதமான விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில், 90 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கின்ற விமானங்களையும் தாக்கியழிக்கும் திறன்கொண்ட விமான எதிர்ப்பு ஏவுகணையும் அடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்யாவின் ஈரானுக்கான இந்த விமான எதிர்ப்பு ஏவுகணை விநியோகத்தை பல்வேறு தரப்புகளும் மறுத்துவருகின்றன.

மூலம்: சங்கதி.கொம்

படம்: பிபிசி.கொம்

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 8:21 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க