Thursday, January 03, 2008

புதிதாய் கோள்கள் எப்படிப் பிறக்கின்றன - தொலைநோக்கி துலக்கிய துப்பு.



நாம் வாழும் பூமி உட்பட கோள்கள் எப்படிப் பிறக்கின்றன என்பதற்கு சுமார் 8 தொடக்கம் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இளம் நட்சத்திரமொன்றைச் சுற்றி காணப்படும் தூசி வளையத்தில் இருந்து தோன்றிக்கொண்டிருக்கும் கோள் ஒன்றை ஜேர்மனிய வானியலாளர்கள் அவதானித்து அதன் தோற்றம் பற்றியும் விளக்கியுள்ளனர்.

இந்தக் கோள் நமது வியாழனைப் போல 10 மடங்கு திணிவால் பெரியது என்பதுடன் அதன் இளம் நட்சத்திரத்தை வெறும் 3.56 நாளிலேயே சுற்றி வந்தும் விடுகிறது..! கோளுக்கும் நட்சத்திரத்துக்கும் இடையிலான தூரம் 6 மில்லியன் கிலோமீற்றர்களாக இருப்பதுடன் கோளின் சுற்றுப்பாதை அது உருவாகிக் கொண்டிருக்கும் தூசி வளையத்துள் அமைந்துள்ளது. (மேலுள்ள படத்தில் அழுத்தி பெரிதாக்கி நோக்குக)

கோள்கள் நட்சத்திர வெடிப்பின் போது உருவாகும் கொஸ்மிக் தூசிகளில் இருந்து அத்தூசிகள் விண்வெளியில் சில காரணிகளின் தாக்கத்தால் பரம்பலடைந்து கலைய முதலே, ஒப்பீட்டளவில் விரைவான காலத்துள் தோன்றிவிடுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கோளும் சுமார் 10 மில்லியன் ஆண்களுக்குள்ளேயே தூசி வளையத்தில் இருந்து தோன்றியுள்ளது..!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 8:02 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

நல்ல தகவல்.

Fri Jan 04, 06:31:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க