Wednesday, January 09, 2008

மீண்டும் உயிர் பெறும் கபிள்.



விண்ணில் சஞ்சரிக்கும் கபிள் தொலைநோக்கி.

நாம் இன்று விண்வெளியில் உள்ள கூறுகள் மற்றும் நிகழ்வுகள் பற்றி தெளிவான படங்களோடு விடயங்களை அறிய முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று விண்வெளியில் சஞ்சரிக்கும் அமெரிக்காவின் நவீன வசதிகள் கொண்ட கபிள் தொலைநோக்கி என்றால் அது மிகையல்ல.

கபிள் 1990 இல் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர்களுக்கு அப்பால் அதன் சுற்றுப்பாதையில் சுழன்றபடி விண்வெளி பற்றிய அவதானங்களைச் செய்து படங்களையும் தகவல்களையும் பூமிக்குத் தந்து வருகிறது இந்த விண்ணில் சஞ்சரிக்கும் தொலைநோக்கி.

இருந்தாலும் அண்மைய ஆண்டுகளில் இதன் பல பகுதிகள் பகுதியாகவும் முழுமையாகவும் செயலிழந்துள்ள நிலையில், நிதிப்பற்றாக்குறை காரணமாக பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கபிளை அமெரிக்க நாசா நிறுவனம் கைவிடத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வந்தன. கபிள் 2010 அல்லது 2011 வாக்கில் முழுமையாகச் செயழிலந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து பின்வாங்கியுள்ள நாசா.. கபிள் தொலைநோக்கிக்கு நீண்ட ஆயுளை வழங்கும் நோக்கோடு, விண்ணோடம் மூலம் விண்வெளி வீரர்களை கபிளுக்கு அனுப்பி அதனைச் சரி செய்வதுடன் அதிநவீன உபகரணங்களை இணைத்து அதன் வலுவையும் உயர்த்த உள்ளனர்.

இதன் மூலம் எதிர்கால மனித சந்ததியும் கபிளால் பயன்பெறும் என்ற நம்பிக்கை புத்தியிர்ப்புப் பெற்றுள்ளது.

கபிள் பற்றிய குறிப்புக்கள்:

* கபிள் Edwin Hubble என்ற அமெரிக்க விண்வெளி வீரரின் பெயர் கொண்டு நாமமிடப்பட்டுள்ளது.

* 1990 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.

* 2.4 மீற்றர் முதன்மைக் கண்ணாடி மற்றும் 5 பிரதான உபகரணங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

* கபிளின் நீளம்: 15.9 மீற்றர்கள்; விட்டம்: 4.2 மீற்றர்கள்; எடை: 11,110 கிலோகிறாம்.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 2:36 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

கபிள் தனது சாதனையைத் தொடரும் என்கிறீர்கள். நல்ல செய்தி.

Thu Jan 10, 03:28:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க