Thursday, January 24, 2008

செவ்வாயில் மனித உருவம்..?!



செவ்வாயின் மேற்பரப்பில் பாறைகள் மத்தியில் தோன்றும் மனித உருவம்.

2004 இல் செவ்வாயில் தரையிறங்கி அங்கு ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நாசாவின் ஸ்பிரிட் ரோவர் அனுப்பிய படங்களை உருப்பெருக்கி ஆய்வு செய்தபோது, அவற்றில் ஒரு படத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் பாறைகளுக்கு மத்தியில் மனித உருவம் போன்ற ஒரு அமைப்பு தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்போ அப்படத்தை நாசா இணையத்தளம் வழி வெளியிட்டுள்ளது.



இப்படத்தில் மனித உருவம் வட்டமிடப்பட்டு காண்பிக்கப்படுகிறது.

உண்மையில் அது உயிரினப் பெறுதியா அல்லது பாறையென்றின் தோற்றமா என்பதை இட்டு இன்னும் தெளிவான விபரங்கள் அறியப்படவில்லை..!



காணொளி.

இருப்பினும் மனிதத் தோற்றம் போன்ற அமைப்புத் தென்படும் அப்படம் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி செவ்வாயில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது..! ஆனால் இந்த ஒரு படத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்த உறுதியான முடிவுகளையும் விஞ்ஞானிகள் எடுக்கமாட்டார்கள் என்பது திண்ணம்..!



Spirit rover - ஸ்பிரிட் ரோவர்

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:23 am

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

அட அங்கும் மனிசன் இருக்கிறதாலதான் பாலவனமாக் கிடக்குதோ. :-)

Thu Jan 24, 12:08:00 pm GMT  
Blogger HK Arun விளம்பியவை...

ஆம்! மனிதனில் ஆராய்ச்சியும், கண்டுப்பிடிப்புகளும் உலகை வியக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

ஆனால், அவற்றையும் தங்களின் மதப்பிராச்சாரங்களுக்கு உற்படுத்த முனையும் மதவாத மனநோயாளர்களின் சிந்தனைப் போக்கு அதைவிடவும் வியப்பைத் தருகின்றது.

Mon Feb 18, 02:34:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க