Thursday, January 31, 2008

காதல் என்பது ஒரு நோய் போன்றது; மருந்து அவசியம் - ஆய்வு முடிவு



காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது

காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual.

"Men, in some way, had become more like women, and women had become like men," Donatella Marazziti of the University of Pisa told New Scientist magazine
.

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

காதல் குருடானது

University College London இல் இடம்பெற்ற பிறிதொரு ஆய்வின் பிரகாரம் காதல் குருட்டுத்தனமானதே என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தமிழில் எப்பவோ சொல்லிட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதுதான் சமீபத்திய ஆண்டில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

காதல் வயப்பட்டவர்களின் மூளையின் நடுநிலைச் சுற்றுடன் தொடர்புடைய சில முக்கிய செயற்பாடுகள் பிந்தங்கி விடுவதால் இவர்களால் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தான் காதல் வயப்பட்டவர்கள் இலகுவாக ஏமாற்றப்படும் அளவுக்கு தமது இணையின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனராம்.

'Love is blind'

They found that the neural circuits that are normally associated with critical social assessment of other people are suppressed when people are in love.

They said the findings may explain why some people are often "blind" to their partner's faults.


இந்த இரண்டு ஆய்வுகளும் காதல் உடலில் சில ஆபத்தான விளைவுகளை உருவாக்கிறது என்பதைக் காட்டி நிற்கின்றன எங்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.

இதைவிட இவற்றுக்கு முந்தைய ஒரு ஆய்வில் இருந்து காதல் வயப்பட்டவர்களில் செறோரொனின் (serotonin) அளவு குறைவடைந்து இருப்பதுடன் இது obsessive compulsive disorder உள்ளவர்களில் உள்ள செறோரொனின் அளவை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் காதலர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை பற்றி obsess ஆக இருக்கின்றனரோ என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

the researchers said the finding may explain why people who are in love can sometimes obsess about their partner.

காதல் நோய்க்கு மருந்து

எதிர்காலத்தில் மேலே கூறிய படிக்கும் இன்னும் பல பாதக விளைவுகளையும் உண்டு பண்ணும் காதலுக்கு மருந்து அல்லது சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவது என்பது நிராகரிக்கப்பட முடியாதது எங்கிறார் பேராரிசியர் (Professor) Gareth Leng (University of Edinburgh).

காதல் வயப்பட்ட பலரும் தங்கள் இணையுடனான உறவுப்பாலத்தை இட்டு திருப்தி இல்லாமல் இருப்பதுடன் பாலியல் ரீதியாகவும் திருப்தி அற்றவர்களாகக் காணப்படுகின்றனராம்.

எனவே இந்தக் காதல் நோய்க்கு எப்படியாவது மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இப்போ விஞ்ஞானிகளுக்கு எழுந்துள்ளது.

இதனால் தான் என்னவோ நம்முன்னோர் எப்பவோ சொல்ல ஆரம்பித்துவிட்டனர் "காதல் கிறுக்கு", "காதல் குருடு" என்று பல மொழிகளை போலும்.

மேலதிக தகவல் இங்கு.


மேலும் ஒரு இணைப்பு - Is love just a chemical cocktail?

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:21 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

ஆகா இதுக்கு வேற மருந்தா. முடியல்ல.

Thu Jan 31, 04:12:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க