Wednesday, February 13, 2008

காற்றில் ஓடும் கார் - காணொளி



காற்றில் ஓடும் கார்.

உலகம், சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் பல பாதகமான விளைவுகளை சந்தித்து வரும் வேளையில் அதற்கு மாற்றீடுகளை கண்டறியும் ஆய்வுகளையும் செய்து வருகிறது.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டு வாகனப் பொறியியலாளர் ஒருவர் காற்றை இயக்குபொருளாக்கி காரைச் செலுத்தும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.



காற்றில் ஓடும் காரின் இயந்திரப் பொறி.

இலகு எடையுள்ள காபன் இழை கொண்டு தயாரிக்கப்பட்ட தாங்கியினுள் காற்றை உயர் அழுத்ததில் அடைத்து அதன் மூலம் காரை இயக்கும் இயந்திரப் பொறியை இயங்கச் செய்வதன் மூலம் இந்த வகைக் கார்களை இயக்க முடிகிறது. நீண்ட பயணத்தின் போது காரின் இயந்திரப் பொறி வெளியிடும் வெப்பத்தின் மூலம் காற்று மேலும் விரிவடைய காரின் இயந்திரத்தின் இயங்கு திறனும் அதிகரிக்கும்.

இப்பொறிமுறையால் சூழலுக்கு இழக்கப்படும் மாசு வாயுக்கள் மற்றும் காபனீரொக்சைட்டின் அளவு முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

மின் கலங்களில் ஓடும் கார்களை விட கூடிய வேகத்தில் இயங்கக் கூடிய இக்கார்கள் மிக விரைவில் இன்னும் அதிகரித்த வினைத்திறனூடு சந்தைக்கு வரவுள்ளன. தற்போதைய வடிவில் இவ்வகைக் கார்களின் விலை ஒன்றும் பெரிய விலையன்று. இவற்றின் தற்போதைய சந்தை விலை 2500 பிரித்தானிய பவுண்கள் மட்டுமே. இது மற்றைய சுவட்டு எரிபொருள் ஆடம்பரக் கார்களின் விலையோடு ஒப்பிடும் போது மிகக் குறைவானதே.

இக்கார்கள் சுவட்டு எரிபொருளில் இயங்கும் கார்களுக்கான மாற்றீட்டின் முதற்படி என்றால் மிகையன்று..!

இக்கார்களுக்கான காணொளி விளக்கம் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 8:22 am

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

http://sirippu.wordpress.com/2007/06/02/aircar/

Wed Feb 13, 08:59:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி சேவியர் உங்களின் இணைப்புக்கு.!

Thu Feb 14, 07:48:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க