Saturday, March 01, 2008

குறட்டை இதய நோய்க்கான அறிகுறி..!



சிலர் தூக்கத்தின் போது பயங்கரக் குறட்டை விடுவார்கள். அண்மையில் அப்படிப்பட்டவர்கள் 12000 பேரை உள்ளடக்கி ஹங்கேரி நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, தூக்கத்தின் போது அதிக சத்தத்துடன் குறட்டை விடுபவர்களுக்கு 34% அதிகமாக இதய நோயும் 67% அதிகமாக strokes (பக்கவாதம்)க்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

ஆனால் அதிக சத்தமில்லாது குறட்டை விடுபவர்களில் இந்தப் பாதிப்பு அவதானிக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி ஆண்களில் 70 வயதைத் தாண்டியதும் குறட்டை விடுவதும் குறைவடைந்து செல்கின்றதாம்..!

எனவே அதிக சத்தத்துடன் குறட்டை விடுறவர்கள் அயலவர்கள் குறித்து மட்டுமன்றி தங்கள் உடலரோக்கியம் நோக்கியும் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது அல்லவா.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:45 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க