Thursday, March 06, 2008

செவ்வாய் கிரகத்தில் பெரும் பனிச் சரிவு!



செவ்வாயில் பனிச் சரிவு நிகழ்வை அடுத்து தூசப்படை எழும் காட்சி.

செவ்வாய்க் கிரகத்தில் ஏற்பட்டு வரும் பனிச் சரிவுகளை தத்ரூபமாக படம் பிடித்து அனுப்பியுள்ளது அந்த கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டிருக்கும் விண்கலம்.

செவ்வாய் கிரக, பனிப் புயல்களின் ஆக்ஷன் படங்கள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் நாஸா அனுப்பிய 'மார்ஸ் ரெகனைஸன்ஸ் ஆர்பிட்டர்' என்ற அந்த விண்கலம், கடந்த மாதம் இந்த படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. மொத்தம் நான்கு பனிச் சரிவுகளை அது படம் எடுத்துள்ளது.

ஒரு படத்தில் பெரிய பனி மலையிலிருந்து ஐஸ் கட்டிகள் பெயர்ந்து விழுகின்றன. பெயர்ந்து விழும் பனிக் கட்டிகள், செவ்வாய் கிரகத்தின் வட முனைப் பகுதியில் சேர்ந்து கிடக்கின்றன.

பனி மலை உடைந்து பனிக் கட்டிகள் சரிந்து விழுந்ததால் பெரும் பனிப் புகை மண்டலமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் புகை மண்டலத்தின் உயரம் கிட்டத்தட்ட 590 அடி.

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை நிகழ்வு விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாஸாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வக விஞ்ஞானி காண்டிஸ் ஹன்சன் கூறுகையில், இந்த நிகழ்வு நமக்குக் கிடைத்திருப்பது முற்றிலும் தற்செயலானது. இதுதொடர்பாக தீவிர ஆய்வில் தற்போது இறங்கியுள்ளோம்.

இந்த மாதிரியான பனிச் சரிவுகள் அடிக்கடி ஏற்படுமா அல்லது அந்த கிரகத்தின் பருக நிலை மாற்றத்தின்போது குளிர் காலத்தில் ஏற்படுமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றார்.

செய்தி: தற்ஸ்தமிழ்.கொம்

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:44 am

1 மறுமொழிகள்:

Blogger வால்பையன் விளம்பியவை...

உயிர்சேதம் ஏதுமில்லையே !!!:)))))

வால்பையன்

Thu Mar 06, 12:29:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க