Tuesday, March 25, 2008

கூண்டோடு செத்து மடியும் தேனிக்கள்.



அமெரிக்காவில் இருக்கின்ற தேனிக்களெல்லாம் அண்மைக்காலமாக ஒட்டு மொத்தமாக கூட்டத்தோடு பறந்து சென்று செத்து மடிகின்றன.

இந்தத் தேனிக்கூட்டம் அப்படியே கூண்டோடு செத்து மடிவதற்கான காரணம் என்ன என்பதை அறிய நிறைய பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

திடீரென தமது கூட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் தேனிக்கள் அப்படியே செத்து விடுகின்ற இந்த நிகழ்வு அங்கு இன்னமும் புரியாத ஒரு மர்மமாகவே இருக்கிறது.

இதனால், தேனிக்களின் மொத்த எண்ணிக்கை 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றது, ஆனால், இதற்கு என்ன காரணம் என்று இதுவரை எவருக்கும் தெரியவில்லை.

தாம் ஒரு நெருக்கடி நிலையின் ஆரம்பத்தில் இருப்பதாக தேனிக்களை வளர்ப்போர் கூறுகிறார்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு விளையும் உணவுப்பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு தேனிக்களின் மூலமே மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகி விளைகின்றன. இதனால், அங்கு உணவுப்பொருட்களின் விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது.

bbc/tamil

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:36 pm

2 மறுமொழிகள்:

Blogger யாத்ரீகன் விளம்பியவை...

>>> அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு விளையும் உணவுப்பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு தேனிக்களின் மூலமே மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகி விளைகின்றன
<<

Inetersting piece of information... thanks..

Wed Mar 26, 03:11:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

"Inetersting piece of information... thanks.."

இந்த மர்மச் சாவுக்குப் பின்னால் நோய் பெருக்கும் நுண்ணங்கிகளும் இருக்கலாம் அல்லது சுற்றுச் சூழல் மாற்றமும் இருக்கலாம்.. நோய் பெருக்கும் நுண்ணங்கிகள் என்றால் அமெரிக்காவில் இருந்து அது உலகெங்கும் பரவ வாய்ப்புண்டு. அதனால் உலகு பலத்த சவாலை சந்திக்க நேரிடலாம். அது ஆபத்துக்களையும் தரலாம்..!

Wed Mar 26, 10:31:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க