Wednesday, March 26, 2008

அந்தாட்டிக்கா பனி விரைந்து உருகிவருகிறது.



பூமியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனிப்படிவுகள் அண்மைக்கால பூமி வெப்பமுறுதல் ஏற்படுத்திய சூழல் வெப்ப அதிகரிப்பால் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட விரைந்து உருகி வருவதல் உலகில் பல சிக்கல்களைத் தோன்றிவித்து வருகின்றது.

அந்த வகையில் அண்மையில் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்களைக் கொண்டு செய்யப்பட்ட அவதானிப்புக்களின் படி அந்தாட்டிக் பனிப் பிரதேசத்தில் உறுதியானது என்று கருதப்பட்டு வந்த Wilkins Ice Shelf பகுதியில் சுமார் 160 சதுர மைல் பரப்பளவுள்ள பனிப்படிவுகள் கடந்த பெப்ரவரி முடிவோடு உருகியுள்ளதாகவும் தற்போது 25 X 1.6 mile விஸ்தீரனமுள்ள பெரும் பனிப்பாறை வேகமாக உருகி வருவதுடன் பிரதான பனிப்படிவிலிருந்தும் பிளந்து பிரிந்து செல்லத் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துரைத்திருக்கின்றனர்.

மேலதிக தகவல் இங்கு - பிரதான இணைப்பில் காணொளியும் உண்டு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:57 am

2 மறுமொழிகள்:

Blogger துளசி கோபால் விளம்பியவை...

சில மாதங்களுக்கு முன் இப்படி உருகி பெரிய பனிமலையில் இருந்து இளகி வந்த ஐஸ்ஷெல்ஃப் மிதந்து கரைக்கு 40 கிலோமீட்டர் தூரத்தில் மிதந்துவந்ததை சுற்றுலாப்போல் மக்கள் சென்று பார்த்தார்கள்.

10 நாள் தினமும் தொலைக்கட்சியில் இதே செய்திதான் நியூஸியில்

Wed Mar 26, 09:11:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் அனுபவப் பகிர்வையும் இங்கு தந்தமைக்கு நன்றிகள் கோபால்.

Wed Mar 26, 10:29:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க