Friday, March 28, 2008

சஞ்சிகைகள் விதைக்கும் மாயத்தனத்தால் ஆண், பெண் மனநிலை பாதிப்படைகிறது.



இளம் (18 வயது தொடங்கி 36 வயது வரை உள்ள) ஆண்களும் பெண்களும் தங்கள் தங்கள் உடலை எப்படி கவர்ச்சியாக வைத்திருப்பது என்பதை சொல்ல என்று வெளியிடப்படும் சஞ்சிகைகளில் உள்ள படங்கள் மற்றும் உடற்பயிற்சி அறிவுறுத்தல்கள் ஆண், பெண் உளவியலில் பாதிப்பை உண்டு பண்ணத்தக்க அபாயத்தைக் கொண்டிருப்பதாக University of Winchester நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த சஞ்சிகைகள் வெளியிடும் கவர்ச்சிகரமான படங்கள் மற்றும் தகவல்களை படித்துவிட்ட ஆண்களும் பெண்களும் தங்களையும் அப்படி உருவாக்கினால் தான் தம்மையும் எதிர்ப்பாலார் கவர்வார்கள் என்ற எண்ணத்தை மனதில் பதித்து செயற்பட ஆரம்பிப்பதோடு தமது உடலமைப்பு அவ்வாறு கவர்சியாக இல்லாத சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக கவலையையும் விரக்தியையும் மனதில் வளர்த்துக் கொண்டு எப்படியாவது சஞ்சிகைகளில் உள்ள மாதிரிக்கு தம்மை உருமாற்ற வேண்டும் என்ற வெறியில் செயற்பட ஆரம்பிக்கின்றனராம். இது சில வகை மன விரக்தி அல்லது மனச் சஞ்சலத்துக்கு அல்லது பாதிப்புக்கு இட்டுச் செல்வதாக ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:31 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க