Friday, March 21, 2008

கருப்பையை வாடகைக்கு விட்டு இந்தியப் பெண்கள் சாதனை.



றுபீனா என்ற பெண் கருப்பையை வாடகைக்கு விட்டு ஒரு அழகிய வெள்ளையினக் குழந்தையை அமெரிக்க உயிரியல் தாய்க்காகப் பெற்றெடுத்துள்ள காட்சி.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந் நகரில் வாழும் பெண்களில் பலர் தமது வருவாய் கருதி தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விட்டு குழந்தைகள் அற்றவர்களுக்கு vitro (ஆய்வுசாலை வழிமுறையில்) முறையில் ( IVF - in-vitro fertilisation ) உருவாக்கப்படும் கருக்களை சுமந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

கடந்த 3.5 வருடங்களில் மட்டும் இந்த நகரில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 150,000 பெண்கள் தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு சுமார் $6500 தொடங்கி $15,000 வரை கூலி வழங்கப்படுகிறது. குறிப்பாக போதிய வருமானமின்றி வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதுடன் அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வரும் பணக்காரர்களுக்கு கூட இவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கின்றனர்.



IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கும் வாடகைத் தாய்களுக்கும் உதவும் டாக்டர் Patel.

vitro முறைக்கருக்கட்டல் பொறிமுறையில் தேர்ச்சி பெற்ற இந்திய பெண் வைத்தியரான Dr Patel கூறுகையில் இந்த முறைமூலம் ஒருவருக்கு ஒருவர் உதவக் கூடியதாக இருப்பதுடன் பணமும் சம்பாதிக்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனக்கும் ஓரளவு வருமானம் வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இதே முறையை தான் அமெரிக்காவில் மேற்கொண்டால் இதை விட உயர்வாக சம்பாதிக்க முடியும் எங்கிறார்.



கருப்பையை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வீடு கட்டும் புஷ்பா எனும் பெண்ணும் அவளின் குடும்பத்தினரும்.

கருப்பையை வாடகைக்கு விடுதல் உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகி உள்ள போதும் இந்தியாவில் கூலிக்கு வாடகைக்கு விடுதல் சட்டப்படி பெண்களுக்கு அனுமதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:55 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க