Saturday, March 29, 2008

பூமிக்காக ஒரு மணி நேரம் இருளில் வாழ்ந்து பழகுவோமா..! (Earth Hour Awareness Post)



29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும்.

மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிர்த்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவு காபனீரொக்சைட் வாயு வளிமண்டலத்துள் சேர்க்கப்படுகிறது. இதனால் உலக வெப்பமுறுதல் விளைவுகள் உட்பட கடந்த தசாப்த காலம் பல புவிக் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

எனவே சக்திப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் வெளியிடப்படும் காபனீரொக்சைட்டின் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி மீள முடியா வளங்களுள் அடங்கும் சுவட்டு எரிபொருட்களின் பாவனை அளவையும் குறைத்துக் கொள்ள முடியும் என்பதை உலகெங்கும் வாழும் மக்களுக்கு உணர்த்த இந்த பூமிக்கு ஒரு மணித்தியாலம் என்பது இன்றைய நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாகவே இன்றை கூகிள் முகப்பு கறுப்பு நிறப்பின்னணியில் வெளிப்படுகிறது. வழமையாக அது வெண்ணிறப் பின்னணியில் வெளிப்படுவதாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:18 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க