Monday, April 28, 2008

10 செய்மதிகளை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவியது இந்திய ராக்கெட்.



இந்தியாவில் ஒரே ராக்கெட் மூலமாக 10 செய்மதிகள் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் இது ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ஒன்று தெளிவான காலநிலையில், செம்மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் புகையை வெளிவிட்டவாறு சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவப்பட்டபோது, விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இந்தியாவின் உட்கட்டமைப்பு மற்றும் மூல வளங்களைக் கண்காணிக்கும் ரிமோட் சென்ஸிங் செய்மதியையும், மற்றும் ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட வெளிநாடுகளின் சிறு செய்மதிகளையும் அந்த ராக்கெட் தூக்கிச் சென்றது.

இந்த செய்மதிகள் ஒவ்வொன்றும் 10 நிமிட இடைவெளியில் ராக்கெட்டிலிருந்து தத்தமது நிலைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

ரஷ்சியா கடந்த ஆண்டில் 16 செய்மதிகளை ஒரே ஏவுகையில் விண்ணுக்கனுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ரஷ்சியாவைத் தொடர்ந்து இந்தியா இதைச் செய்துள்ளது..!

நன்றி: பிபிசி/தமிழ்

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:56 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க