Tuesday, April 22, 2008

22-04-2008 இன்று பூமி நாள் ( Earth Day)



எமது பூமிப்பந்தில் 1970 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் திங்கள் 22 ம் நாள் பூமி நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய சூழலில்.. காலநிலை மாற்றங்கள், புவி வெப்பமுறுதல் மற்றும் சூழல் மாசடைதல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 1970 இல் பிரகடனப்படுத்தப்பட்டு அவ்வளவு முக்கியத்துவமின்றி கொண்டாடப்பட்டு வந்த பூமி நாள் இன்று பூமி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் பொருட்டு முதன்மை அளிக்கப்பட்டு கொண்டாடப்பட ஊக்குவிக்கப்படுகிறது.

இந்தப் பூமி நாள், பூமியின் வட அரைக்கோளம் இலை தளிர் காலத்தையும் (spring )தென் அரைக்கோளம் இலையுதிர் காலத்தையும் (autumn) கொண்டிருப்பதுடன் பூமியின் மத்திய கோட்டை நெருங்கி சூரியன் உச்சம் கொடுக்கும் காலத்தையும் உள்ளடங்கிய பருவகாலப்பகுதியில் அமைந்திருக்கிறது..! இந்த நாளின் முதன்மை நோக்கம் மக்களுக்கு பூமி பற்றியும் அதன் சுற்றுச்சூழல் பற்றியும் அறிவூட்டுவதாகும்..!

இந்த நாள் 1969 ம் ஆண்டு John McConnell என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தகவல் உதவி: http://en.wikipedia.org/wiki/Earth_Day

அதிகாரபூர்வ இணையத்தளம்: http://ww2.earthday.net/

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:39 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

இப்படி ஒரு நாள் இருக்கென்று இன்று தான் அறிகிறேன். காதலர் தினம் இருக்குது அதை எல்லோரும் அறிவினம். ஆனால் நாம் வாழும் பூமிக்கு அதன் நிலையைச் சொல்ல உள்ள நாள் பலரை எட்டவில்லை என்பது வேதனைதான்.

பதிவுக்கு நன்றிகள்.

Tue Apr 22, 11:33:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க