Monday, April 14, 2008

Mars - 500 திட்டத்தின் கீழ் செவ்வாய்க்குப் போகப் போகும் குரங்குகள்.



1983 இல் ரஷ்சியாவால் விண்ணுக்கு அனுப்பி விண்ணில் 5 நாட்கள் சஞ்சரித்த குரங்காரில் (அவருக்கு இட்ட பெயர் Bion) ஒருவர்.

பிற உயிரினங்கள் மற்றும் மனிதனை முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய பெருமை ரஷ்சியா (பழைய சோவியத் யூனியன்)வையே சாரும். அதே ரஷ்சியா தற்போது macaques இன குரங்குகளை செவ்வாய்க்கு அனுப்ப உத்தேசித்து அதற்கான தெரிவுகளில் இறங்கியுள்ளது. Mars - 500 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இவை செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ளன.

Mars - 500 திட்டமானது செவ்வாய்க்குப் பறக்க 250 நாட்கள் திரும்பி வர 250 நாட்கள் செவ்வாயில் தரையிறங்க.. தங்க ஒரு மாதம் என்று 520 நாட்களை உள்ளடக்கிய வரையறையின் கீழ் அமைகிறதாம்.

கொஸ்மிக் கதிரியக்க தாக்க விளைவுகளில் மனிதருக்கு ஒத்த தன்மையைக் காண்பிக்கும் குரங்குகளின் இப்பயணம் வெற்றி பெறும் பட்சத்தில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவதிலும் சிரமம் இருக்கப் போவதில்லை என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். எனினும் அது அடுத்த 10 வருடத்துக்குள் சாத்தியப்படப் போவது சிரமம் என்றும் கூறுகின்றனர்.

எனினும் Mars - 500 திட்டம் அடுத்த ஆண்டில் இருந்து செயற்படுத்த ஆரம்பிக்கப்பட உள்ளது.

செவ்வாய்க்குப் போக என்று விசேடமாக இனப்பெருக்கப்பட்ட சுமார் 40 குரங்குகள் பயிற்சிக்கு என்று தெரிவு செய்யப்படவுள்ளனவாம்..!

இந்தப் பரிசோதனையின் கீழ் நீண்ட காலம் விண்வெளியில் தங்க நேர்வதால் ஏற்படும் உடற் திணிவிழப்பு, நீண்ட தனிமைப்படுத்தல் மற்றும் அரைத்திண்ம அல்லது அடர் திரவ உணவுகளை தொடர்ந்து உண்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் கதிரியக்கத்துக்கு நீண்ட காலம் உட்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய முடியும் என்றும் தெரிகிறது..!

ஏலவே ரஷ்சியா பல குரங்குகளை விண்ணுக்கு அனுப்பி சாதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..!

மேலதிக செய்தி இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:33 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க