Wednesday, April 30, 2008

WWW. க்கு வயது 15.



www. ஐ கண்டறிந்து அதன் மூலம் இணைக்கப்படும் இணையத்தளங்களூடு தரவுகளை பகிர்வதை உலகுக்கு அறிமுகப்படுத்திய Sir Tim Berners-Lee.

நாம் எல்லாம் இன்று இணைய உலகில் சஞ்சரிக்கவும் எம்மை அடையாளமிடவும் பாவிக்க உதவும் உலக வலைப்பின்னலுக்கான இணைய இணைப்புக் குறியீடான world wide web (www.)யும் இணையத்தையும் (internet) இணையத்தளப் பாவனையும் (web site) ஒருங்கிணைத்து பொது உலகுகப் பாவனைக்காக வெளியிட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

தகவல் தொழில்நுட்பத்தில் பெருமளவில் செல்வாக்குச் செய்யும் இந்த www. கடந்த 15 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியிலும் சரி உலக மக்களை இணையவழி இணைத்து ஓர் கூரையின் கீழ் உறவாட தரவுகளைப் பரிமாற ஊக்குவிப்பதிலும் சரி அசுர வளர்ச்சி கண்டு வந்திருகிறது.

எதிர்காலத்தில் இந்த www. இணைய இணைப்பி மூலம் உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இணையத்தளங்கள் பெருகி இருக்கும் என்பது மட்டுமன்றி இலகுவாக எல்லோராலும் கையாளப்படவும் வகை செய்யப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் இன்று சுமார் 165 மில்லியன் இணையத்தளங்கள் உள்ளன.

முதலாவது இணையத்தளம் இணைய வலையில் ஏற்றப்பட்டது 1991 இல் ஆகும். www. அறிமுகப்படுத்தப்பட்டது 1994 இல் ஆகும்..!

இன்று www. வழி போகாத இளைய சமூகமே இல்லை எனும் அளவுக்கு அது சமூகத்தில் செல்வாக்குச் செய்து வருகிறது. www. மூலம் இணைய வழி சென்று தரவுகளை பெறும் வசதிகளை எமக்கு கண்டறிந்து அளித்தவர் சேர் Tim Berners-Lee என்பவராவார்.

www. பல வகை இணையத்தளங்களுக்கு எம்மை இணைப்பதில் காட்டும் பல நன்மைகளூடு சில தீமைகளையும் தன்னக்கத்தே கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது..!

மேலதிக தகவல்கள் இங்கு 1

மேலதிக தகவல்கள் இங்கு 2

மேலதிக தகவல்கள் இங்கு 3

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:47 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க