Monday, May 26, 2008

80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தம்பதியர்.



100வது வயதில் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "இளம்" தம்பதியர்.

இங்கிலாந்தில் உள்ள Plymouth என்ற இடத்தில் வசிக்கும் Frank மற்றும் Anita தம்பதியர் தங்கள் நூறாவது வயதில் (Frank நூறாவது வயதை ஏற்கனவே எட்டிவிட்டார் அவரின் துணைவி Anita வரும் யூன் திங்களோடு நூறாவது வயதை எட்டிவிடுவார்) 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் 1928 மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்று அவர்களே கூறியுள்ளனர்.

இவர்களே பிரிட்டனில் திருமணம் செய்து அதிக காலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளாக கருதப்படுகின்றனர். அதுமட்டுமன்றி Anita அவர்கள் 100 வயதை எட்டியதும் இவர்களே நூறு வயதை எட்டிய பிரிட்டனின் முதல் தம்பதியராகவும் அமைவர் என்றும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு 73 வயதில் ஒரு மகன் உட்பட இரண்டு பிள்ளைகளும் நாங்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வெடிப்புகளில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர்களாம்.

மிகவும் எளிமையான முறையில் தங்கள் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த தம்பதியரை நாமும் எமது வலைப்பூ சார்பாக வாழ்த்துகின்றோம்.

இன்றைய இளம் தம்பதியர் ஓரிரண்டு ஆண்டுகள் கூடி வாழ்வதே அருமையான நிகழ்வாகிவிட்ட இந்த நாகரிக உலகில் இவ்வாறான நிகழ்வுகளும் செய்திகளும் உதாரணங்களும் நிச்சயம் சமூகத்துக்கு நல்ல எடுத்துக் காட்டுகளாக அமையும் இளம் சந்ததியினருக்கு நல்ல முன்மாதிரிகளைக் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலதிக தகவல் இங்கு.

மேலதிக தகவல் இங்கும் உண்டு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:56 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க