Thursday, May 08, 2008

இந்தியா நீண்ட தூர வீச்சுக் கொண்ட ஏவுகணையை சோதித்தது.



உலகில் நீண்ட தூர வீச்சுள்ள ஏவுகணையைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக அக்னி- 3 ஐ சோதித்ததன் வாயிலாக இந்தியாவும் குறித்த நாடுகளின் பட்டியலில் இணைந்து கொள்கிறது.

அக்னி - 3 எனும் தரையில் இருந்து தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அதன் நிர்ணயித்த வீச்சான 3000 கிலோமீற்றர்கள் தூரத்தைக் கடந்து சென்று வங்காள விரிகுடாவில் வைக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளதாக இவ்வேவுகணைச் சோதனையின் பின் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுகணை சீனாவின் முக்கிய நகரங்களை குறிவைத்துத் தாக்கப் பயன்படலாம் என்பதும், 1.5 தொன் எடையுள்ள அணு ஆயுதத்தை இதன் மூலம் காவிச் செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். அதுமட்டுமன்றி இவ்வேவுகணையை நகரும் வாகனங்களில் அமைந்த ஏவுதளத்தில் இருந்து எங்கு வைத்தும் ஏவ முடியும்.

ஏலவே அக்னி - 1 என்ற 750 கிலோமீற்றகள் வீச்சுள்ள ஏவுகணையையும் அக்னி - 2 என்ற 2000 கிலோமீற்றர்கள் வீச்சுள்ள ஏவுகணையையும் இந்தியா தயாரித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பல தடவைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டும் உள்ளன..!

இதற்கிடையே இந்தியாவின் போட்டி நாடான பாகிஸ்தானும் அடிக்கடி சீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை தனது சொந்தத் தயாரிப்பின் கீழ் தயாரித்துப் பரிசோதித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அண்மையில் பாகிஸ்தானும் Hatf VI அல்லது Shaheen-II எனும் 2500 கிலோமீற்றர்கள் வீச்செல்லையுள்ள அணு ஆயுதங்களைக் காவிச் செல்லவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருந்தமை இவற்றுள் முக்கியமான ஒன்றாகும். இதுவே பாகிஸ்தானின் நீண்டதூர ஏவுகணையாகவும் இன்று இருக்கிறது.

அடிக்கடி நிகழும் இந்த ஏவுகணைப் பரிசோதனைகளும் மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளும் தெற்காசிய பிராந்தியம் இராணுவ அச்சுறுத்தலுக்கான பிராந்தியமாக உருவெடுத்து வருவதையே காட்டிநிற்கிறது.

மேலதிக தகவல் இங்கு (இந்திய ஏவுகணை பற்றியது)

மேலதிக தகவல் இங்கு (பாகிஸ்தான் ஏவுகணை பற்றியது)

மேலதிக தகவல் இங்கு (பாகிஸ்தான் 08-05-2008 இல் செய்த ஏவுகணை பரிசோதனை பற்றியது)

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 6:23 am

3 மறுமொழிகள்:

Blogger ரசிகன் விளம்பியவை...

//இந்த சம்சார சாகாரத்தை கடக்க ஓடத்தை ஓட்டும் பொருப்பை பெண்களிடம் கொடுத்தால் போதும். சுலபமாக கடக்கலாம்.//

பெருகுவரும் போர் அபாயங்களை குறைத்து சமாதானம் காப்பதில் இந்த இராணுவ சமசீர் முயற்ச்சிகள் அவசியம்ன்னு தோனுது:)

Sat May 10, 07:33:00 am BST  
Blogger ரசிகன் விளம்பியவை...

விபரங்களை அருமையா தொகுத்திருக்கிங்க.. நன்றிகள்:)

Sat May 10, 07:34:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

இரண்டு வழியில் சமாதானத்தை நிலை நிறுத்தலாம்..

1. இராணுவ விஸ்தரிப்பை.. எல்லோரும் ஒருமித்துக் கைவிடுவது.

2. இராணுவச் சமநிலையைப் பேண போட்டி போடுவது.

இரண்டாவது நிலை முன்னதை விட உலகுக்கு ஆபத்தானது. சமநிலை குழம்பும் போது.. உலகம் அழிவுகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம் இல்லையா.

அந்த வகையில்.. இராணுவ வல்லமை அதிகரிப்பை.. அணு ஆயுதப் பெருக்கத்தை எல்லோரும் கைவிட வேண்டும்.

அது அமெரிக்காவில் இருந்து உலகெங்கும் தொடர வேண்டும்..!

Sun May 11, 09:44:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க