Monday, May 19, 2008

பூச்சிகொல்லிகள் புற்றுநோய் தாக்கத்தை அதிகரிக்கின்றன.



பூச்சிகொல்லிகளில் (pesticides) உள்ள இரசாயனங்கள் மனிதரின் கலக்கருவில் உள்ள நிறமூர்த்தங்கள் தாங்கியுள்ள கருவமிலத்தில் (deoxyribonucleicacid - DNA) தாக்கத்தை ஏற்படுத்தி புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக இந்திய விவசாயிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் பூச்சிகொல்லிகளைப் பாவித்தல், பூச்சிகொல்லிகள் பாவித்த பின் குறிப்பிட்ட கால அளவு கடக்க முதல் விளைச்சல் பொருட்களை சந்தைப்படுத்தல், உணவாக்கல்.. பூச்சிகொல்லிகளால் கொல்லப்பட்ட பூச்சிகளை உண்ணும் கோழிகளை உணவாக்கல் மற்றும் பீடைகொல்லிகள் விசிறப்பட்ட புற்களை விலங்குகளுக்கு உணவாக்கி அவ்விலங்குணவுகளை உண்ணுதல் (பால், இறைச்சி) போன்றன ஆபத்து விளைவிக்கக் கூடிய அளவில் கருவமிலத்தில் தாக்கத்தை உண்டு பண்ணும் இரசாயனங்களை உடலில் கொண்டிருக்க வாய்ப்பை அளிக்கின்றன.

எனவே மக்கள் இவை தொடர்பில் விழிப்பாக இருப்பது அவசியம். சில வகை புற்றுநோய்கள் தீர்க்கப்பட முடியாத நோய்களாக இன்னும் உலகில் அடையாளம் காணப்படுகின்றன. சில வகை புற்றுநோய்கள் ஆரம்பத்தில் கண்டறியப்படின் குணப்படுத்தப்படக் கூடியவை.

மேலதிக தகவல் இங்கு.

மேலதிக தகவல் பிபிசி/தமிழ்.

கருவமிலங்கள் பற்றிய மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:58 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க