Sunday, May 25, 2008

சேவல் சத்தமாகக் கூவுகிறது என்பதற்காக கொல்லப்படுகிறது.



நகர் புறத்தில் சேவல் கூவுவது சில மனிதர்களுக்கு எரிச்சலாக இருக்கின்றது என்பதற்காக சத்தம் போட்டுக் கூவும் சேவல்களை பிடித்து வெட்டி விட உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த விநோத சட்டம் சுவாஸிலாந்தின் (ஆபிரிக்க கண்ட நாடு) தலைநகர் Mbabane இல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சத்த மாசு சம்பந்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் நகரங்களில் சேவல்களை வளர்க்கத் தடையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நகரங்களில் 12 பேட்டுக் கோழிகளுக்கு மேல் வளர்க்கவும் கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது..!

சேவல் கூவது சூழலை சத்த மாசாக்கிறது எரிச்சலைத் தூண்டுகிறது என்றால் நகர வீதிகளில் ஓடித்திரியும் மகிழூர்த்தி (கார்) மற்றும் பார ஊர்திகள் போன்ற வாகனங்களின் இயந்திரங்கள் பிறப்பிக்கும் சத்தங்கள் எரிச்சலை உண்டாக்குவதில்லையா.. அது சத்த மாசில்லையா.??! போன்ற பதில் வினவல்களும் எழவே செய்கின்றன.



மனிதர்கள் கேட்கக் கூடிய மற்றும் கேட்கக் கூடாத மற்றும் வெவ்வேறு ஊடகங்கள் பிறப்பிக்கும் சத்ததின் அளவுகளைக் குறிப்பிடும் படம்.

சேவல்/கள் பொதுவாக 40 தொடங்கி 70 decibels அளவு சத்தத்தை உருவாக்கவல்லது/ன.

மனிதர்கள் 0 தொடக்கம் 100 டெசிபல்கள் (Decibels -dB) அளவுள்ள சத்தத்தை அவற்றின் அளவிற்கு ஏற்ப குறிப்பிட்ட நேர காலங்களுக்கு தொடர்ந்து கேட்க அனுமதிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

மனிதர்கள் கேட்கக் கூடிய சத்தத்தின் அளவு மற்றும் காது தொடர்பான பிரச்சனைகள் குறித்த மேலதிக தகவல்கள் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:57 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க