Sunday, May 18, 2008

வைத்தியசாலை MRSA superbug ஐ கொல்லக் கூடிய புதிய மருந்து கண்டுபிடிப்பு.



வைத்தியசாலைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்குரிய வகையில் தொற்றுக்களைச் செய்யும் MRSA superbug எனப்படும் Methicillin-resistant Staphylococcus aureus (MRSA) எனும் பக்ரீரியாவுக்கு எதிரான மருந்தை Destiny Pharma எனும் பிரித்தானிய மருந்து உற்பத்தி செய்யும் மையம் கண்டுபிடித்துள்ளது.

உலகெங்கும் இந்த வைத்தியசாலைக்குரிய MRSA பக்ரீரியாவின் தொற்றுக்கள் மூலம் பல மரணங்கள் சம்பவித்து வருகின்றன.

XF-73 என்ற குறியீட்டு நாமம் இடப்பட்டுள்ள இந்த புதிதாகக் கண்டறியப்பட்ட மருந்து 2011 முதல் பிரித்தானியாவில் பாவனைக்கு வரும் என்று தெரிகிறது.

அதுமட்டுமன்றி இந்த மருந்து கண்டுபிடிப்பானது MRSA பக்ரீரியாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று கூறும் இம்மருந்தைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் இந்த மருந்தானது MRSA பக்ரீரியாக்களில் பொதுவாக இனங்காணப்படும் 5 வேறுபட்ட உப இனங்களை முற்றாக அழிக்கக் கூடிய வல்லைமையைக் கொண்டுள்ளதாம்.

இக்கண்டு பிடிப்புத் தொடர்பான மேலதிக தகவல் இங்கு.

MRSA பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 5:58 am

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

குருவிபபா,
விஞ்ஞானத்தில் இன்னொரு அற்புதத்தை அறிய தந்தமைக்கு நன்றிகள்.

Sun May 18, 06:30:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

வணக்கம் தூயா பபா. எப்படி இருக்கீங்க. நீங்க நலமா இருப்பியள் என்று நான் அறிவன். இருந்தாலும் கேட்கிறன்.

சமையல் சாப்பாடு எப்படிப் போகுது. ரெம்பப் பிரமாதமா சமைக்கிறீங்க. ஆனந்த விகடனில எல்லாம் சமைச்சதா கேள்விப்பட்டன்.

ஓகே.. வரவுக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி தூயா பபா.

மீண்டும் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள். :)

Sun May 18, 08:30:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க