Saturday, May 24, 2008

Phoenix செவ்வாயில் தரையிறங்குகிறது.



Phoenix lander செவ்வாயில் தரையிறங்க தீர்மானிக்கப்பட்டுள்ள பகுதியும் இதற்கு முன்னர் செவ்வாய்க்கான கலங்கள் செவ்வாயில் தரையிறங்கிய இடங்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் Phoenix lander எனும் புதிய தன்னியக்க கலம் செவ்வாயில் இன்னும் சில தினங்களில் (25 or 26-05-2008) தரையிறங்க உள்ளது.

கடந்த ஆகஸ்ட் திங்களில் அமெரிக்க புளோரிடாவில் இருந்து டெல்ரா II உந்துவாகனம் மூலம் செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட மேற்படி தன்னியக்க கலம், பூமியில் இருந்து சுமார் 423 மில்லியன் மைல்கள் தனது பயணத்தை மேற்கொண்டு செவ்வாயில் தரையிறங்க உள்ளது.



Phoenix lander உம் அதன் 7 பிரதான விஞ்ஞான உபகரணப் பகுதிகளும்.

இக்கலம் செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் (அல்லது பனிக்கட்டி) இருக்கிறதா அல்லது இருந்ததா என்பதற்கான ஆதாரங்களைத் தேடும் நடவடிக்கையில் இறங்கும் என்று இதன் செயல்நோக்கைத் தீர்மானித்துள்ள விஞ்ஞானிகள் கூறியுள்ளதுடன் அதற்கேற்ப உபகரண வசதிகளை உள்ளடக்கிய வகையில் இக்கலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மாதிரிகளை சேகரிக்க என்று கட்டளைக்கு அமைய தன்னியக்க பொறியில் இயங்கும் கையும் இந்தக் கலத்துக்கு உண்டு.

செவ்வாயில் நீர் அல்லது பனிக்கட்டிப் படிவுகள் இருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம் என்று கருதும் பகுதியில் Phoenix lander தரையிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Phoenix lander செயற்படும் முறைக் காணொளி மற்றும் மேலதிக தகவல்கள் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:32 pm

2 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

நன்றி

மேலே உள்ள குருவி நன்றாகஇருக்கு.

Sun May 25, 12:43:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அது நியூட்டனின் 3ம் விதியைச் சொல்கிறது வடுவூர்.

குருவி தலைப்புக்குரிய எழுத்துக்களை இழுத்துச் செல்வது போல ஒரு தடவையும் பின்னர் எழுத்துக்கள் குருவியை இழுத்துச் செலவது போலவும் இருக்க அமைத்துக் கொண்டேன் எளிமையான வகையில். (மறுதலையுமாகவும் கருதலாம்)

நன்றி.

Sun May 25, 05:51:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க