Monday, May 26, 2008

Phoenix செவ்வாயில் வெற்றிகர தரையிறக்கம்; படங்கள், தகவல்கள் அனுப்பப்படுகின்றன.



பீனிக்ஸ் அனுப்பிய செவ்வாயின் மேற்பரப்பு பற்றிய காட்சி. (பீனிக்ஸ் தரையிறங்கிய பகுதியை அண்டிய பகுதிகளில் ஒரு சிறிய பகுதி இதில் காண்பிக்கப்படுகின்றது.)

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்குச் சொந்தமான Phoenix lander (பீனிக்ஸ் லாண்டர்) சுருக்கமாக பீனிக்ஸ் என்று அழைக்கப்படும் செவ்வாயில் உயிரினங்களின் பெறுதிகள் மற்றும் நீர் இருப்புக்கான சான்றுகளைத் தேடச் சென்றுள்ள ஆய்வுக்கலம், செவ்வாயின் மேற்பரப்பில் நாசா விஞ்ஞானிகள் நிச்சயத்தபடி வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

விண்வெளியில் இருந்து செவ்வாயின் அடர்ந்த காற்றுமண்டலத்தினுள் சுமார் 21,000 கிலோமீற்றர்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் பிரவேசித்த இக்கலம் குடைவிரிப்பான் (பரசூட்)உதவியுடன் தன் வேகத்தை ஒரு மனிதனின் அவசர நடைக்குரிய வேகத்துக்குக் குறைத்துக் கொண்டு இறுதியில் அதன் 3 கால்களையும் சரியான முறையில் செவ்வாயின் தரை மீது பதித்துக் கொண்டுள்ளது.



பீனிக்ஸின் 3 கால்களில் ஒன்று சரிவர செவ்வாயின் தரையோடு பொருந்தி நிற்கும் காட்சி.

தரையிறங்கிய Phoenix ஆய்வுக்கலம் அனுப்பியுள்ள படங்களினை ஆதாரமாகக் கொண்டு பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை அது அனுப்பியுள்ள படங்களில் செவ்வாயின் மேற்பரப்புப் பாறைகள் மற்றும் கூறுகள் பற்றிய படங்களும்; Phoenix கலத்தின் சூரியக் கலத்தட்டுக்கள் சரியான வகையில் விரிந்திருக்கும் படங்களும்; கலத்தின் மூன்று கால்களில் ஒன்று சரிவர செவ்வாய் மேற்பரப்பில் பதிந்து நிற்கும் காட்சிகளும் பிரமிக்க வைப்பனவாக அமைந்துள்ளன.

Phoenix இன் இந்த வெற்றிகர தரையிறக்கத்தை நாசா விஞ்ஞானிகள் அக்கலம் தரையிறங்கித் தகவல்களை அனுப்பத் தொடங்கியதும்.. கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.



Phoenix இன் செயற்பாட்டுக்குரிய மின் சக்தியைப் பிறப்பிக்க என்று அமைக்கப்பட்டுள்ள சூரியக் கலத்தட்டு சரியாக முறையில் அதன் பல்கோணி வடிவில் விரிந்திருக்கும் காட்சி. - பீனிக்ஸால் படம் பிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட காட்சி.

Phoenix ஆய்வுக்கலம் ஓரிடத்திலேயே தொடர்ந்து தரித்து நின்று ஆய்வுகளைச் செய்யக் கூடிய தன்மை உடையது. இது இடம்விட்டு இடம் நகரும் ஆற்றல் அற்றது. இதற்கு முன்னர் 2004 இல் நாசா அனுப்பிய இரண்டு ரோவர்களான ஸ்பிரிட் மற்றும் ஒப்பசுனிற்றி ரோவர்கள் நகரும் தன்மை உடையன. ஆனால் அவற்றால் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைத் திரட்டி பகுப்பாய்வுகளைச் செய்யும் திறன் அதிகம் இருக்கவில்லை. ஆனால் Phoenix அது தன்னுடன் கொண்டுள்ள தன்னியக்க பொறியில் இயங்கவல்ல கையைக் கொண்டு மாதிரிகளைத் திரட்டி, ஏலவே அதில் பொருத்தப்பட்டுள்ள பெளதீக மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு உபகரணங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வுகளைச் செய்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பும் வல்லமை கொண்டது மட்டுமன்றி நின்ற இடத்தில் இருந்து கொண்டு சுற்றயலைப் படம் பிடிக்கும் மற்றும் சூழலின் தன்மைகளை பெளதீக ரீதியில் உணரும் திறனும் அதற்கு உண்டு. அதற்கேற்ற வகையில் அதில் பல விஞ்ஞான பகுப்பாய்வு உபகரணங்களுடன் உணரிகளும் வேறுபட்ட படப்பிடிப்புக் கருவிகளும் (கமராக்களும், இமேஜர்களும்) பொருத்தப்பட்டுள்ளன.



பீனிக்ஸ் கொண்டுள்ள விஞ்ஞான உபகரணப்பகுதிகள் மற்றும் முக்கிய கூறுகள் - பீனிக்ஸ் வடிவமைப்பாளர்கள் வெளியிட்ட படம் - நாசா

Phoenix அனுப்பிய செவ்வாயின் மேற்பரப்புப் பற்றிய படங்களையே நாசா தற்போது ஊடகங்களுக்கு வெளியிட்டு வருகிறது. அடுத்து வரும் சில தினங்களில் Phoenix தனது பகுப்பாய்வுச் செயற்பாட்டையும் வெற்றிகரமாக செய்ய ஆரம்பித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் பூமியில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட சுமார் 50% கலங்கள் வெற்றிகரமாக தரையிறங்கத் தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாசாவினால் செவ்வாய் நோக்கி அனுப்பப்பட்டு தோல்வியில் முடிந்த கலங்களின் சாம்பலில் இருந்து உருவானது என்பதை நினைவு கூறவே இக்கலத்துக்கு பீனிக்ஸ் (Phoenix) என்று பெயரிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கு பூமியில் இருந்து மனிதன் உருவாக்கிய செயற்கைக் கலத்தை அனுப்பிய முதலாவது நாடு ரஷ்சியா ஆகும். அந்த நாடு 1960 ம் ஆண்டு தனது முதற்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. விண்ணியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை.. சரித்திரத்தை ஆரம்பித்து வைத்து மனித குலத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் ரஷ்சியர்கள் என்றால் அது மிகையல்ல.

மேலதிக தகவல் இங்கு- காணோளியும் உண்டு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:54 am

11 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

Thanks for your message.

Mon May 26, 09:32:00 am BST  
Blogger puduvaisiva விளம்பியவை...

பயனுள்ள தகவல் குருவி,
இதைபற்றிய பல புதிய தகவல்களை வழங்கி சேவை செய்ய வாழ்த்துகிறோம்.

சிறு உதவி கீழ் உள்ள வாசகம்

தொகுத்து வழங்குவது விஞ்ஞானம் தேடிக் குருவிகள் - kuruvikal

இது போன்று நகரும் தன்மையுடன் அமைப்பது
எப்படி ? விளக்கவும்.

அன்புடன்
புதுவை சிவா.

Mon May 26, 10:24:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றிகள் சிவா.

அது ஒன்றும் கடினமில்லை.

கீழுள்ள எச் ரி எம் எல் குறியீட்டு சொல்லடையை அங்கு இணைத்துக் கொண்டால் சரி..

-marquee- என்று தொடங்கி...

தேவையான சொற்தொடர்களை எழுதிவிட்டு

அதை மூடிக்கொள்ளும் குறியையும் எழுதுங்கள்.

இதில் முழுமையாக எழுத பிளாக்கர் அனுமதிக்கவில்லை. அதனால் முழுமையாக எனது முகப்பில் உள்ள மெசேஜ் பொக்சில் போடுகிறேன் பாருங்கள்.

மேலும் விபரங்கள் அவசியம் என்றால் கேளுங்கள். என்னால் முடிந்தவற்றுக்கு உதவலாம்.

நன்றிகள்.

Mon May 26, 10:58:00 am BST  
Blogger Athisha விளம்பியவை...

நல்ல பயனுள்ள தகவல்களுக்கு நன்றிகள் குருவி,

Mon May 26, 11:08:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி அதிஷா. பூமியில போர் அடிச்சுச்சுன்னா.. எல்லோருக்கும் செவ்வாய்க்குப் போக ஆசை இருக்கத்தானே செய்யும்.. இல்லையா. :)

Mon May 26, 11:13:00 am BST  
Blogger ராஜ நடராஜன் விளம்பியவை...

பயனுள்ள தகவலுக்கு நன்றி.

Mon May 26, 11:22:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி நட்டு. உங்கள் வரவிற்கும் நன்றி பகர்தலுக்கும்.

Mon May 26, 11:55:00 am BST  
Blogger Athisha விளம்பியவை...

//
kuruvikal said...
நன்றி அதிஷா. பூமியில போர் அடிச்சுச்சுன்னா.. எல்லோருக்கும் செவ்வாய்க்குப் போக ஆசை இருக்கத்தானே செய்யும்.. இல்லையா. :)

//

ஓ...... போர் அடிச்ச செவ்வாய்க்கா ...ம்ம்ம் எத்தன பேரு இப்டி கெளம்பிருக்கீங்க... ;-))))

Mon May 26, 12:09:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

//ஓ...... போர் அடிச்ச செவ்வாய்க்கா ...ம்ம்ம் எத்தன பேரு இப்டி கெளம்பிருக்கீங்க...//

மொத்தம் எத்தனை பேருன்னு எண்ணிப் பார்க்கல்ல.. ஆனா நான் கிளம்பிட்டன்.

பூமி செம போர். :)

Mon May 26, 12:25:00 pm BST  
Blogger ஆ.கோகுலன் விளம்பியவை...

சாதாரணமான வகையீடு தொகையீடு கணக்குகளுக்கும் இரசாயன சமன்பாடுகளை சமன்படுத்துவதற்கும் திக்குமுக்காடும் போது, இந்த பீனிக்ஸ் செயற்றிட்டத்தில் எவ்வளவு கணிப்புகள் விதிகள் எடுகோள்கள் கையாளப்பட்டிருக்கும் என்பதை நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது.
தகவலுக்கு நன்றி குருவி.

Sat May 31, 01:29:00 pm BST  
Blogger ஆ.கோகுலன் விளம்பியவை...

This comment has been removed by the author.

Sat May 31, 01:30:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க