Tuesday, June 03, 2008

வழுக்கைக்கு முடிவு பிறக்கிறது.



முடி உதிர்வதால் தலையில் வழுக்கை தோன்றுவது என்பது ஆண்களில் நீண்ட காலப் பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 40% ஆண்களில் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு செயற்கையான காரணங்களும் உண்டு மரபணு சார்ந்த காரணங்களும் உண்டு. செயற்கைக் காரணங்களில் கதிரியக்க சிகிச்சை அளித்தல் (radiotherapy) அல்லது எரிதலுக்கு இலக்காதல் என்பனவும் முடி உதிர்வைத் தூண்டுகின்றன.

இவ்வாறு தோன்றும் வழுக்கைக்கு தீர்வாக இன்று நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறை என்பது, வழுக்கை உள்ள இடத்தில் பிறிதொரு இடத்தில் இருந்து சத்திர சிகிச்சை முறைகளின் கீழ் பத்திரமாக அகற்றிய மயிர்களை நாட்டுதல் என்ற அளவில் தான் இருக்கிறது.

ஆனால் சமீபத்தில் பிரித்தானிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இருந்து மயிர்க்கணுக்களில் உள்ள மயிரை உற்பத்தி செய்யும் உயிர்க்கலங்களைப் பிரித்தெடுத்து அவற்றை செயற்கை முறையில் ஆய்வுசாலையில் பெருக்கி பின் அவற்றை வழுக்கை உள்ள இடத்தில் ஊசி மூலம் செலுத்துவதன் மூலம் வழுக்கை உள்ள இடங்களில் புதிய மயிர்களை முளைக்க வைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த அதி நவீன சிகிச்சை முறையின் கீழ் செய்யப்பட்ட பரீட்சார்த்த சிகிச்சை அளிப்பின் போது, சிகிச்சை அளிக்கப்பட்ட 19 பேரில் 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஆறு மாதங்களில் வழுக்கை இருந்த இடங்களில் புதிய மயிர்கள் முளைத்திருப்பதானது இந்த முறையின் வெற்றித் தன்மையை எடுத்துக்காட்டியுள்ளது.

எனினும் பரீட்சார்த்த சிகிச்சை அளிப்புக்கள் இன்னும் தொடர உள்ளதாகவும் அவை மேலும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் பட்சத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் வழுக்கையை முற்றாக அகற்றக் கூடிய அளவுக்கு இந்த அதி நவீன சிகிச்சை முறை வளர்க்கப்பட்டு விடும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தப் புதிய சிகிச்சை முறை follicular cell implantation என்று அழைக்கப்படுவதுடன் இந்த சிகிச்சை முறை Intercytex எனும் பிரித்தானிய நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வகையில் பல் மற்றும் பிற உடல் உறுப்புக்களையும் வளர்க்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் மேலும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:05 pm

9 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

வழுக்கைக்கு முடிவா? கடைசியா ஒருக்கா தடவிப் பார்த்துக் கொள்கிறேன்.

Wed Jun 04, 08:47:00 am BST  
Blogger puduvaisiva விளம்பியவை...

வணக்கம் குருவி!

எனது நண்பருக்கு இந்தப் புதிய சிகிச்சை முறை follicular cell implantation முறையில் புதுவையில்{JIMPER) ல்சிகிச்சை பெற்றார் ஆனால் ஓவ்வாமை (Allergy) காரணமாக இருந்த முடியும் கொட்டிக் கொண்டது ;-(((

புதுவை சிவா
NP. Now I find the C.Box message thank you Kuruvi Thozhaa. :-)))

Wed Jun 04, 11:13:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி சிவா உங்கள் தகவல் பரிமாற்றத்துக்கு.

ஆம்.. இந்தப் புதிய சிகிச்சை முறை மீள மீள பரீட்சிக்கப்பட்டு.. அவற்றின் பாதுகாப்பு மற்றும் வெற்றி அளவைப் பொறுத்தே அவற்றின் பயன்பாடு தீர்மானிக்கப்படும்.

உங்கள் நண்பர் அவசரப்பட்டு விட்டார். அல்லது clinical trial லுக்குப் பாவிக்கப்பட்டு விட்டார்.

Wed Jun 04, 01:25:00 pm BST  
Blogger Athisha விளம்பியவை...

நம் பதிவர்களில் பலருக்கும் ஏற்ற பதிவு ......

எனக்கும்

ஏம்பா கொஞ்சம் சீக்கிரம் இதுலாம் இங்க பண்ணமாட்டாங்களா???

Wed Jun 04, 01:26:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அதிஷா அவசரப்படாதீங்க. :) எல்லாம் பரீட்சிக்கப்பட்டு முழு வெற்றி அளிப்பின் உலகெங்கும் இது நடைமுறைக்கு வரும்.

Wed Jun 04, 01:28:00 pm BST  
Blogger Athisha விளம்பியவை...

//
அதிஷா அவசரப்படாதீங்க. :) எல்லாம் பரீட்சிக்கப்பட்டு முழு வெற்றி அளிப்பின் உலகெங்கும்

//

என்னங்க பண்றது கண்ணாடில தினமும் மண்டய பார்த்தா தல முடிய எண்ணிரலாம் போல இருக்கு

அவசரப்படமா என்ன பண்ண...

அதெல்லாம் வழுக்கயா இருந்தாதான் தெரியும்

Wed Jun 04, 01:36:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

//அதெல்லாம் வழுக்கயா இருந்தாதான் தெரியும்//

எதுக்கும் இப்போதைக்கு அஸ்வினி ஆயில் பாவியுங்க. முடி கொண்டாது என்றாங்களே சன் ரிவில. அப்புறம் முடி கூட கொட்டிச்சு என்னை ஏசப்படாது. :)

Wed Jun 04, 02:02:00 pm BST  
Blogger Athisha விளம்பியவை...

//
எதுக்கும் இப்போதைக்கு அஸ்வினி ஆயில் பாவியுங்க. முடி கொண்டாது என்றாங்களே சன் ரிவில. அப்புறம் முடி கூட கொட்டிச்சு என்னை ஏசப்படாது. :)
//

நீங்க வேற அத போட்டுதான் மண்ட இந்த லெவல்லருக்கு ...

Wed Jun 04, 02:06:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

என்னால முடியல்ல.. உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னால முடியல்ல.. அதிஷா. :)))

Wed Jun 04, 04:12:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க