Monday, June 23, 2008

நிறைவான காலை உணவு உடல் நிறையைக் குறைக்கும்.



குறைவான காலை உணவை உட்கொண்டு மதியமும், இரவும் மற்றும் இடையிலும் என்று அதிகளவான உணவை உள்ளெடுக்கத் தூண்டுவதிலும் அல்லது காலை உணவைத் தவிர்த்து மற்றைய வேளைகளில் அதிக அளவு உணவை உட்கொள்ளத் தூண்டுவதிலும் நிறைவான காலை உணவை உண்பதால் மதிய மற்றும் இரவு வேளைகளில் உள்ளெடுக்கும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ள முடிவதோடு உடல் நிறையையும் சீராகக் குறைக்க முடியுமென்று அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறைந்தளவு காபோவைதிரேற்று (மாப்பொருள் உணவுகள்)அடங்கிய காலை உணவை உட்கொள்பவர்களுக்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு உடல் நிறை குறைவது போலத் தோன்றினும் பின்னர் அது அதிகரிக்கும் வகையில் அவர்களில் பசி மற்றும் உணவுத் தேவை தூண்டப்படுகிறது என்றும் இதனால் காபோவைதிரேற்று, நார் பொருட்கள் மற்றும் பழங்கள் அடங்கிய, கொழுப்புக் குறைந்த, நிறைவான காலை உணவை உட்கொள்வதன் மூலம் மிகுதி நாள் முழுவதும் பசித் தூண்டலை மட்டுப்படுத்தவும், அடுத்து வரும் வேளைகளில் உள்ளெடுக்கும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் என்று அமைகின்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதே நிறைக் குறைப்புக்கும் உடல்நலனுக்கும் நல்ல வழிமுறை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:21 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க