Tuesday, June 24, 2008

மின்னணு கழிவுகளை கையாள்வது குறித்த மாநாடு.



மின்னணுக் கழிவுகள்

நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள், விஷவாயுக்களை வெளியிடக்கூடிய மின்னணு சாதனங்களின் கழிவுகளை கையாள்வது எப்படி என்பது குறித்த சர்வதேச மாநாடு ஒன்று நேற்று திங்கட்கிழமை இந்தோனேஷியத் தலைநகர் பாலியில் நடந்தது. 170 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

மனிதன் உள்ளிட்ட உலக உயிரினங்களுக்கும், தாவரங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரும் ஆபத்தாக உருவாகி வரும் இந்த நச்சுக்கழிவுகளை எப்படி அழிப்பது அல்லது குறைப்பது என்பது குறித்து இந்த மாநாடு விவாதித்தது.

உலக நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சி காரணமாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுப்பொருட்களின் அளவும் வேகமாக அதிகரித்துவருகிறது.



கணினிக் கழிவுகள்

விஷத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களில் இருந்து, மக்கிபோகாத பிளாஸ்டிக் வரை, பயன்படாத கணினிகள், அவற்றின் உதிரிபாகங்கள் என பலவகையான மின்னணு சாதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மலை மலையாக குவியத்துவங்கியுள்ளன. இதனால் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படத்துவங்கியுள்ளன.

சுற்றுச்சூழலை பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினையாக இந்த அழுகாத நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள் விவகாரம் உருவாகிவருதாக இந்த மாநாடு கவலை தெரிவித்தது. இதனை கையாள்வது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

நன்றி: பிபிசி/தமிழ்

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:44 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க