Thursday, June 05, 2008

இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான தேவையை உலகம் உணர வேண்டும்.



அண்மைக்காலமாக உலக அளவில் அத்தியாவசிய உணவு தானியங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் அவற்றின் விலைவாசி உயர்வும் உலகை இரண்டாவது பசுமைப் புரட்சி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.

மனிதர்களின் வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களும், எரிபொருள் தேவைகளுக்காக தானியப் பயிர்களின் உயிர்த்திணிவு பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டதுவும், உலக வெப்ப முறுதல் விளைவுகளும் உணவு தானியங்களுக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களின் மத்தியில் இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

----------------------

இது தொடர்பாக பிபிசி/தமிழில் வந்த செய்தி கீழே தரப்படுகிறது.

ரோமாபுரியில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் உணவு உச்சிமாநாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சியின் தேவை என்பது குறித்து அதிக அளவில் வலியுறுத்தப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விவசாய உற்பத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் வளர்சியே பசுமை புரட்சி என்று அழைக்கப்படுகிறது. முதலாம் பசுமை புரட்சிக்கு பயன்படுத்திய உக்திகள் இரண்டாம் பசுமைப் புரட்சி காலத்திலும் எடுபடுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ரோமில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளான்மை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட உலக உணவு மாநாட்டில் உலக அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டன. ரோமில் விவாதிக்கப்பட்ட விடயங்களுக்கு உடனடி தீர்வு ஏதும் கிடையாது என்று கருத்து வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு முக்கிய காரணமான விஞ்ஞானியாக இருந்தவரான டாக்டர். எம். எஸ். சுவாமிந்தாதன்.

புரட்சி போன்ற கோஷங்களை எழுவதன் மூலம் இதற்கான தீர்வு மிகவும் எளிது என்று கூறிவிடமுடியாது. பசுமை புரட்சி ஏன் வெற்றி பெற்றது என்பதை அறிய அதன் வெவ்வேறு கூறுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே இருந்த முறைகளில், பயிற்களில் செய்யப்பட்ட மாற்றங்களா அல்லது விளைச்சல் அதிகரிப்பா என்பதை ஆராய வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார் பேராசிரியர் சுவாமிநாதன்.

ஒரு குறிப்பிட்ட அளவுடைய நிலத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட விவசாயத் தொழிலாளர்களை கொண்டு மாற்றங்களை அலச வேண்டும். ஆப்பிரிக்காவில் உள்ள விவசாயிகளை கலந்து பேசி அதன் அடிப்படையில் அவர்களின பங்களிப்புடன் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நன்றி: பிபிசி/தமிழ்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:26 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க