Monday, June 16, 2008

Honda நிறுவனம் தயாரிக்கும் ஐதரசன் கார்கள்.



ஐதரசன் (Hydrogen) மற்றும் ஒக்சிசன் (Oxygen)போன்ற வாயுக்களைப் பயன்படுத்தி பெறப்படும் மின் சக்தியில் இயங்கும் கார்களை ஜப்பானிய Honda நிறுவனம் உலகில் முதன்முதலில் வர்த்தக ரீதியாக தயாரிக்க உள்ளது.

இவ்வாண்டில் இருந்து முதலில் அமெரிக்க சந்தைகளுக்குள் நுழைய உள்ள FCX Clarity என்ற நாமமுடைய இக்கார்கள் படிப்படியாக ஜப்பானியச் சந்தைகளையும் எட்ட உள்ளன.

எதிர்வரும் 3 வருடங்களில் சுமார் 200 கார்களைத் தயாரித்து தவணை முறைக் கட்டணம் செலுத்துதல் என்ற வகையில் விற்பனைக்கு விடத் தீர்மானித்துள்ளது Honda நிறுவனம்.

ஐதரசன் வாயு மற்றும் ஒக்சிசன் வாயுக்களைப் பயன்படுத்தி ஓடவுள்ள இக்கார்கள் வழமையான சுவட்டு எரிபொருளில் (பெற்றோல்) ஓடும் கார்களை விட 3 மடங்கு வினைத்திறனுள்ள வகையில் எரிபொருளை பாவிக்கும் தன்மையுடையன என்று கூறியுள்ளது கொண்டா நிறுவனம்.

இக்கார்கள் கழிவாக பூச்சிய காபன் சார் கூறுகளின் வெளியீட்டைக் கொண்டவை என்றும் கழிவு வாயுவாக நீராவியையே வெளியிடப்படும் என்றும் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கார்களின் முதல் 5 வாடிக்கையாளர்களும் அமெரிக்கர்களாக இருக்கப் போவதுடன், மாதத்துக்கு 600 டொலர்கள் என்ற அடிப்படையில் 3 வருட தவணை கட்டண முறையில் இக்கார்களை கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.



1 Hydrogen: Constantly pumped in at negative terminal.
2 Oxygen: Pumped in at opposite positive terminal.
3 Catalyst: Helps electrons break free from hydrogen atoms.
4 Membrane: Allows hydrogen ions through but blocks electrons.
5 Circuit: Electrons flow through circuit to positive terminal.
6 Electrons and hydrogen ions combine with oxygen, forming water.

இக்கார் இயங்கும் தொழில்நுட்பம் மேலே சுருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:20 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க