Saturday, June 14, 2008

சூரியக் குடும்பக் கூறுகளின் புதிய பட்டியல். (plutoids எனும் புதிய வகை சேர்க்கப்பட்டுள்ளது)



சூரியக் குடும்ப 8 கோள்களும் பிற dwarf கோள்களும் புளுரொயிட்ஸுக்களும்.

பல ஆண்டுகளாக சூரியக் குடும்பத்தில் புளுட்டோ உட்பட 9 கோள்கள் உள்ளனவாகவே படிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த 2006ம் ஆண்டு புளுட்டோ கோளாகக் கருதப்பட முடியாது என்ற தீர்மானத்தை விஞ்ஞானிகள் எடுத்ததன் பின்னர் அது சூரியக் குடும்பத்தில் கோளுக்கான அந்தஸ்தை இழந்தது.

அதன் பின் சூரியக் குடும்பத்தில் 8 கோள்களும் புளுட்டோ உட்பட வேறு சில dwarf கோள்களும் இருப்பதாகவே பட்டியலிடப்பட்டிருந்தது.

International Astronomical Union (IAU) மிகச் சமீபத்தில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடத்திய கூட்டத்தில் புளுட்டோ மற்றும் Eris போன்ற dwarf கோள்களை plutoids எனும் புதிய வகைப்படுத்தலுக்குள் இட்டுக் கொள்வதென்று தீர்மானித்துள்ளது.

இதன்படி plutoids க்குள் அடங்குவதற்கு விண் பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க பருமன் மற்றும் பிரகாசம் அவசியம் என்றும் அவை புளுட்டோவுக்கு அப்பால் இருப்பனவாகவும் இருந்தல் வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Ceres எனும் ஓரளவு பருமனுடைய சூரியக் குடும்ப விண் பொருள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள asteroid பட்டியில் காணப்படுவதால் அதனை plutoids க்குள் அடக்குவதில்லை என்றும் விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வருங்காலங்களில் இந்த புதிய பாகுபாட்டின் கீழ் மேலும் பல plutoids சூரியக் குடும்பத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:13 am

6 மறுமொழிகள்:

Blogger அதிஷா விளம்பியவை...

ஒன்னுமே புரியல கொஞ்சம் இன்னும் விளக்கமா புரியற மாதிரி சொல்லுங்க

Sat Jun 14, 12:08:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அதிஷா..

சூரியக் குடும்பத்தில் (solar system) 9 கோள்கள் அல்லது கிரகங்கள் உள்ளன என்று படித்திருப்பீர்கள் இல்லையா.

அந்த 9 கோள்களில் ஒன்பதாவது கோளான புளுட்டோ 2006ம் ஆண்டு கோள்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அதற்குக் காரணம் அதன் பருமனை விடப் பெரிதான இன்னொரு கோள் புளுட்டோவுக்கு அப்பால் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டதுதான்.

அதன் பின்னர் புளுட்டோவும் புதிதாகக் கண்டறியப்பட்ட கோளும் கோள்கள் என்ற நியமத்துக்குள் வர முடியாத படிக்கு நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் பருமன் மற்றும் பிரகாசம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றை கோள்கள் பட்டியலில் இருந்து விலக்க முடிவு செய்தனர்.

அப்படி விலக்கப்பட்ட புளுட்டோ கோள் பின்னர் dwarf planet என்று பட்டியலிடப்பட்டது. இப்போ அதனையும் புதிதாகக் கண்டறியப்பட்ட Eris எனும் விண்பொருளையும் plutoids என்ற புதிய வகைக்குள் வகைப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் இப்போ சூரியக் குடும்பத்தில் 9 கோள்களுக்குப் பதிலாக 8 கோள்கள் தான் உள்ளன. புளுட்டோ அந்தப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டு புதிய பிரிவான plutoids க்குள் அடக்கப்பட்டுள்ளது.

நன்றி அதிஷா உங்கள் வினவலுக்கு. இப்போ இந்தப் பதில் திருப்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி- குருவிகள்.

Sat Jun 14, 09:14:00 pm BST  
Blogger அதிஷா விளம்பியவை...

முன்னாடிக்கு இப்ப கொஞ்சம் புரியர மாதிரி இருக்கு..

நன்றி குருவி

Sun Jun 15, 05:06:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

கோயில்களில இன்னும் நவ (9) கிரகங்கள் வைச்சிருக்காய்ங்களே.

Sun Jun 15, 12:23:00 pm BST  
Blogger பெத்த ராயுடு விளம்பியவை...

//கோயில்களில இன்னும் நவ (9) கிரகங்கள் வைச்சிருக்காய்ங்களே.//


அதற்கும் விஞ்ஞானத்துக்கும் தொடர்பு கிடையாது. ஏனென்றால், சூரியன் ஒரு விண்மீன், சந்திரன் ஒரு துணைக்கோள், ராகு, கேது என்பன ஒரு வால் நட்சத்திரத்தின் தலை மற்றும் வால் பகுதிகளாகும். மீதமிருப்பவையே கோள்கள் ஆகும்.

Tue Jun 17, 02:51:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அனானியின் சந்தேகத்துக்கு நல்லதொரு சிறிய விளக்கம் அளித்துள்ளீர்கள் பெத்த ராயுடு.

நன்றி உங்கள் வரவுக்கும் இடுகைக்கும்.

Tue Jun 17, 06:58:00 am BST  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க