Thursday, July 31, 2008

2100 ஆண்டுகள் பழமையான கணணி கண்டுபிடிப்பு.



2100 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படும் கணணி.

1901 ம் ஆண்டு, ரோமன் கப்பல் சிதைவுகளில் இருந்து சுழியோடிகளால் தற்செயலாக கண்டெடுக்கப்பட்டது மிகப் பழமையான பொறி ஒன்று.

நீண்ட ஆய்வுகளின் பின்னர் குறிப்பாக X-கதிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் அதனோடிணைந்த கணணி மயப்படுத்தப்பட்ட நுட்பமான முப்பரிமான ஆய்வுகளின் பின் குறித்த பொறி ஆதியான ஒலிம்பிக் நகரில் வான் கோள்களின் சுழற்சிக் கால அளவைக் கணித்துச் செயற்படும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட் காட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறி 2100 ஆண்டுகள் பழமையானது என்றும் கண்டறிந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இந்தப் பொறி வெண்கல கலப்புலோகத்தால் ஆன உதிரிப் பாகங்களை கொண்டிருக்கிறது.

பழைய ஒலிம்பிக் போட்டிகள் இன்றையது போன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை என்றில்லாமல், நான்கு குறிப்பிட்ட விளையாட்டுக்கள் ஆண்டுக்கு ஒன்றென்று நான்கு ஆண்டுகள் விளையாடப்பட்டு வந்துள்ளன என்ற விடயமும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 12 மாதங்களின் பெயர்களும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மேற்படி பொறி தற்போது கிறீஸ் நாட்டில் ஏதன்ஸ் நகரில் தேசிய தொல்பொருள் காப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

-----------------



ஆழ் கடல் மீன்.

இதற்கிடையே மத்திய அத்திலாந்திக் சமுத்திரப் பகுதியில் சுமார் 2300 மீற்றர்கள் அல்லது 2.3 கிலோமீற்றர்கள் ஆழமான பகுதியில் வைத்து ஆழ் கடல் மீன் ஒன்று பிடிக்கப்பட்டு விசேட உபகரணங்களின் உதவியோடு அது புவி மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அழ்கடல் அமுக்க சூழல் பரிகரிக்கப்படும் போது அந்த மீன் சாதாரணமாக அசைகின்ற போதும் அமுக்கம் குறைக்கப்படும் போது அது நிலை தளம்பி அசைவின்றி இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆழ்கடலில் 1000 மீற்றர் ஆழத்திலேயே, உயிரினங்கள் உயிர் வாழ்வது கடினமானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மீன் Pachycara saldanhai என்ற இரு சொற் பெயரீட்டைக் கொண்டதாகும்.

இந்த மீனைக் கொண்டு எவ்வாறு சாதாரண அமுக்கத்தை விட அதி உயர் அமுக்கத்தில் உயிரினங்கள் உயிர் வாழ முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆராய உள்ளனராம்.

மேலதிக தகவலும் காணொளியும் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:34 am

2 மறுமொழிகள்:

Blogger puduvaisiva விளம்பியவை...

Hi Kuruvi Friend

How are you!!

This new is very strange and wonder that time the sailer used like that equipement really amazz

thank share this

yours
puduvai siva

Thu Jul 31, 08:28:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

என்ன சிவா சிலந்தி ஆகிட்டீங்க.. ஏதேனும் சங்கதிகள்..? -:)))))

நன்றி வினவு தங்கள் இணைப்புக்கு.

Thu Jul 31, 09:20:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க