Sunday, July 06, 2008

70 வயதுப் பாட்டிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.



இந்தியாவின் வடக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் Omkari Panwar எனும் கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவருக்கு ஆணும் பெண்ணும் என்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

IVF முறையில் கருக்கட்ட வைத்து பாட்டியின் கருப்பையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இரண்டும் சிசேரியன் மூலம் பிரசவிக்கச் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் தலா இரண்டு இறாத்தல் எடையுள்ளனவாக ஆரோக்கியமானவையாக இருக்கின்றன என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

70 வயதுப் பாட்டிக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் 5 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

ஆண் வாரிசு வேண்டி இக்குழந்தைகளை இந்த வயதில் பெற்றெடுக்கத் தீர்மானித்ததாக பாட்டியின் கணவர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாட்டிக்கு அவரின் வயதை நிறுவத்தக்க பிறப்புச் சான்றிதழ் கிடைக்காததால் உலகில் வயதான அம்மா என்ற தகுதியை இவர் இன்னும் பெற முடியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எனினும் இவரின் வயது நிரூபிக்கப்பட்டால் உலகின் வயதான அம்மாவாக இவரே விளங்குவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரமும் காணொளியும் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:22 pm

2 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

//எனினும் இவரின் வயது நிரூபிக்கப்பட்டால் உலகின் வயதான அம்மாவாக இவரே விளங்குவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.//

பாட்டிக்கு வாழ்த்துக்கள், இந்த சாதனைக்கு விதை போட்ட கில்லாடி தாத்தாவுக்கும் பாராட்டுக்கள்.
:))))))))

Mon Jul 07, 01:22:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

கோவி.கண்ணனுடன் இணைந்து குருவிகளின் வாழ்த்துக்களும்.. பாட்டிக்கு சமர்ப்பணம். :)

Mon Jul 07, 10:12:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க