Monday, July 14, 2008

மலேரியாவுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு.



புரதங்கள் கொண்டு ஆக்கப்பட்டுள்ள ஒட்டும் பசை, ஒட்டுண்ணி நோயாக்கி புகுந்துள்ள செங்குருதிக் கலத்தை சூழ்ந்து காணப்படும் நிலை.

உலகில் குறிப்பாக வெப்ப வலைய நாடுகளில் வருடத்துக்கு பல ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுக்கும் மலேரியா நோய்க்கு புதிய வகையில் சிகிச்சை அளிக்கக் கூடிய முறை ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மலேரியா நோயை உருவாக்கும் புரட்டோசோவா (Protozoa) வகை ஒட்டுண்ணி நோயாக்கி குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களுள் புகுந்து கொண்டு குறிப்பிட்ட காலம் வாழ்வதால் அவ்வாறு ஒட்டுண்ணிகள் புகுந்து கொண்ட செங்குருதிக் கலங்களை உடலில் உள்ள நிர்ப்பீடணம் (immune system) இனங்கண்டு தாக்காதிருக்க உதவும் புரதப் பசைப் படையை உருவாக்கும் 8 புரத மூலக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 8 புரத மூலக்கூறுகள் சேர்ந்து ஆக்கப்படும் அந்த பாதுகாப்புப் பசையில் ஒரு புரத மூலக்கூறின் உற்பத்தியை தடுத்தாலே அதன் செயற்பாட்டைத் தடுத்து ஒட்டுண்ணி நோயாக்கி புகுந்து கொண்டுள்ள செங்குருதிக் கலங்களை இலகுவாக தாக்கி அழிக்க வகை செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



அனோபிலிஸ் பெண் நுளம்பு.

மலேரியா உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஆகும். இது நுளம்புகளில் அனோபிலிஸ் (Anopheles) பெண் நுளம்புகளால் பெரிதும் தொற்றுள்ள மனிதரில் இருந்து தொற்றற்ற மனிதருக்கு காவப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு.

விக்கிபீடியா தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:57 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க