Tuesday, July 15, 2008

தூக்கமின்மை ஞாபகக் குழப்பத்துக்கு இட்டுச் செல்கிறது.



இரவில் சரியான தூக்கமின்மை ஞாபகக் குழப்பத்துக்கு இட்டுச் செல்வதாக ஜேர்மனி மற்றும் சுவிஸ்லாந்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த ஞாபகக் குழப்பத்தால் சரியான வகையில் நினைவில் உள்ள தகவல்களை மீளப் பெற முடிவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பரீட்சைக்குப் போகும் மாணவர்கள் பரீட்சைக்கு முதல் நாள் இரவில் நித்திரையின்றி நீண்ட நேரம் படிப்பதைக் கண்டிருக்கிறோம். அதேபோல் அலுவலகங்களில் வேலை செய்வோரும் வேலைப் பழு கூடிய நேரங்களில் இவ்வாறு செயற்படுவதைக் கண்டிருக்கிறோம். சிலர் இரவு நேர வேலைகளில் தூக்கமின்றி நீண்ட நேரம் ஈடுபடுவதும் உண்டு. அவர்கள் எனிமேல் அப்படிச் செய்வது சரியானதா என்பதை இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கக் கூடிய சூழல் தோன்றியுள்ளதாகவே தெரிகிறது.



மூளையின் பகுதிகள்.

அதேவேளை நாம் நித்திரை கொள்ளும் போது ஞாபகத்தன்மை பலமடைகிறது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி காலையில் கோப்பி அருந்துவது நித்திரையின்மையால் ஏற்படும் ஞாபகக் குழப்பத்தை குறிப்பிடத்தக்க அளவு (10%) தவிர்க்க உதவுவதாக மேற்குறிப்பிட்ட ஆய்வு கண்டறிந்துள்ளது. கோப்பியில் உள்ள caffeine, மூளையில் நித்திரையின்மையால் ஏற்படும் ஞாபகக் குழப்பத்துக்கு காரணமான பகுதியில் (prefrontal cortex) செய்யும் செல்வாக்கே இதற்குக் காரணமாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:30 am

2 மறுமொழிகள்:

Blogger rapp விளம்பியவை...

ஹப்பா, இனிமேல் நான் நிம்மதியா தினமும் ஒரு காப்பி குடிக்கலாம். ரொம்ப நன்றிங்க தகவல்களுக்கு

Tue Jul 15, 08:55:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

காப்பியும் அதிகம் குடிக்கக் கூடாது. அளவோடு காலையில் இளஞ்சூட்டில் ஒரு காப்பி குடிப்பது நலம்..!

நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும்..!

குருவிகள்.

Tue Jul 15, 10:58:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க