சிகிச்சைகளின் பயனாய் எயிட்ஸ் தாக்கம் கண்டோரின் ஆயுள் காலம் நீடிப்பு.
எயிட்ஸ் நோய் தொற்றுதலுடன் உயிர் வாழ வழமையாக எதிர்வு கூறப்படும் காலத்தை விட எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச் ஐ வி (வைரஸ்)க்கு எதிராக வழங்கப்படும் "Antiretroviral" சிகிச்சைகளைப் பெறுவோர் சராசரியாக 13 ஆண்டுகள் அதிக காலம் வாழ முடிகின்றமை ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி சிகிச்சைகளின் கீழ் வழங்கப்படும் மாத்திரைகளில் அடங்கியுள்ள இரசாயனங்கள் குறித்த வைரசின் பெருக்க வேகத்தை கட்டுப்படுத்தப்படுவதோடு புதிய தொற்றுக்களுக்கான வாய்ப்பும் குறைக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்தச் சிகிச்சை முறை 1990 இல் இருந்து அமுலில் உள்ளது.
அந்த வகையில் எயிட்ஸ் நோய் ஒப்பீட்டளவில் விரைந்து மரணத்தை விளைவுக்கும் நோய் (fatal disease) என்ற பட்டியலில் இருந்து நீண்ட காலம் இருக்கக் கூடிய தீராத வியாதி (chronic condition - நீரிழிவு போன்ற நிலை) என்ற பட்டியலில் சேர்க்கப்படக் கூடிய நிலைக்கு மாற்றம் கண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்தாலும் இந்த ஆயுள் கால நீடிப்பு ஒப்பீட்டளவில் இன்னும் சிறிதானதாகவே இருக்கிறது எங்கின்றனர்.
மேலதிக தகவல் இங்கு.
Labels: எச் ஐ வி, எயிட்ஸ், நோயியல், மருந்தியல்
0 மறுமொழிகள்: