Saturday, July 26, 2008

அழிவை நோக்கும் மயில்கள்.!



சாதாரணமாக தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த பல மிருகங்கள் மற்றும் பறவையினங்கள், மனிதனின் மாமிச இச்சையால் அரிய விலங்கினங்களாகிப் போன கதை இன்னும் தொடர்ந்து வருகிறது.

இந்திய தேசியப் பறவையான மயில்கள் காடுகளில் உல்லாசமாக வாழ்ந்து வந்தன. தற்பொழுது காடுகள் அழிந்து வருவதாலும், சில சமுக விரோதிகளின் கூடாரமாக மாறி வேட்டையாடப்படுவதாலும், மயில்கள் காட்டை விட்டு மக்கள் வசிக்கும் இடங்களின் அருகே நடமாடி வருகின்றன.

ஆனால் விரைவிலேயே அரிய வகை பறவையினப் பட்டியில் மயிலினமும் சேரப் போகிறது.

முன்பெல்லாம், தாம்பரத்தைத் தாண்டினால், முடிச்சூர், படப்பைப் பகுதிகளில் மற்ற சாதாரணப் பறவைகளாப் போலவே மயில்கள், வான்கோழிகளைப் பார்க்கலாம். ஆனால் இப்போது நாள் முழுக்கத் தேடினாலும் அங்கெல்லாம் ஒரு மயிலைக் கூட காணமுடியாது. சுற்றிச்சுற்றி வேட்டையாடித் தீர்த்துவிட்டார்கள்.

அட, விராலி மலைப் பகுதியில் கூட எங்கோ ஓரிரண்டு மயில்களைத்தான் பார்க்க முடிகிறது.

இப்போது முதுகுளத்தூர் பகுதியில் உள்ள மயில்களுக்கும் ஆபத்துந வந்துவிட்டது. முதுகுளத்தூர் பகுதியில் இறைச்சிக்காக மயில்கள் வேட்டையாடப்படுவதால் மயில் இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வயல்வெளி, கண்மாய், குளம் இவற்றில் உலாவும் மயில்கள் தோகையை விரித்து ஆடுவதால் அதன் அழகை இப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.

ஆனால் சிலர் இறைச்சிக்காக தொடர்ந்து மயில்களை வேட்டையாடி வருவதை வனத்துறையினர் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.

பறவைகள், விலங்கினங்களைக் காக்க தேசிய அளவில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் அமைப்பினர் இதுபோன்ற செயலகளை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இல்லையேல் விரைவிலேயே, உயிரியல் பூங்காக்களில் பார்க்கப்படும் பறவையின்களில் ஒன்றாக மாறிவிடும் மயினமும்!

நன்றி: தற்ஸ்தமிழ்.கொம்

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:13 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

அப்ப எங்ட எதிர்கால சந்ததி மயிலை போட்டோவில தான் பார்க்கும் நிலை வரும் போலத் தெரிகிறது.

Sun Jul 27, 08:06:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க