Tuesday, July 29, 2008

கோடை விடுமுறைக்கு விண்வெளிக்கும் போகலாம் வாங்க..!தாய்க் கலத்தை ஒட்டியபடி SpaceShipTwo (நடுவில் உள்ள கலம்) விண்ணில் பறக்கும் காட்சி. (சித்திரம்)

கோடை விடுமுறைக்கு இது வரை காலமும் பூமியில் தான் ஊர் ஊரா சுற்றி வந்தார்கள் மனிதர்கள். இப்போ விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லும் காலம் எல்லோ. நேற்று வரை அந்தப் பாக்கியம் சிலருக்கு என்று தான் இருந்தது. ஆனால் பிரித்தானிய வர்த்தகரும் அமெரிக்க வேர்ஜின் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புதிய வகை தனியார் விண்ணோடம் தற்போது விண்வெளிக்கான சுற்றுலாவை எளிமைப்படுத்தப் போகிறது என்றால் மிகையல்ல.இது SpaceShipTwo விண்ணோடத்தைக் காவிச் செல்லும் தாய்க்கலம், பிரித்தானிய வர்த்தகரும் இத்திட்டத்திற்கான முதலீட்டாளருமான Richard Branson இன் தாயின் நாமமான Eve கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.

SpaceShipTwo எனும் விண்ணோடம் 4 இயந்திரங்களைக் கொண்ட தாய்க் கலம் மூலம் வானில் சுமார் 50000 அடி உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பூமிக்கு வெளியே விண்வெளி நோக்கி ஏவப்படும். பூமிக்கு மேலே 100 கிலோமீற்றர்கள் தூரம் வரை இந்த விண்ணோடம் பயணிகளை காவிச் செல்லும்.

இந்த விண்ணோடம் ஒரு தடவையில் 6 பயணிகளையும் 2 பணியாளர்களையும் காவிக் கொண்டு செல்ல என்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.VMSEve Virgin Galactic தாய்க்கலத்துடன் இத்திட்டத்தின் மூலகர்த்தாவான பிரித்தானிய வர்த்தகர் Richard Branson.

இவரும் இவரின் குடும்பத்தினரும் இச்சுற்றுலாவில் முதலில் இடம்பெறுவோர் வரிசையில் தம்மைப் பதிவு செய்துள்ளனராம்.


ஏற்கனவே எடைக் குறைப்பு நோக்கோடு, உலோகங்கள் கொண்டு அல்லாமல் காபன் மற்றும் விசேட பசைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உடற்பகுதியைக் கொண்டதாக தாய்க்கலம் உருவாக்கப்பட்டு அண்மையில் அமெரிக்காவில் அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் SpaceShipTwo விண்ணோட தயாரிப்பு இன்னும் 30 வீதத்தால் பூர்த்தி செய்யப்பட வேண்டி இருக்கிறது. ஏலவே 70% பணிகள் பூர்த்தியாகிவிட்ட நிலையில் மிகுதிப் பணி பூர்த்தியானதும் விண்ணோடம் தாய்க்கலத்தோடு ஒட்டியபடி வானில் உயரப் பறந்து விண்வெளிக்கு பாய வேண்டியதுதான் பாங்கி.

இந்த விண்வெளிச் சுற்றுலாச் செய்ய ஒரு பயணிக்கு சுமார் 200,000 அமெரிக்க டாலர்கள் தேவை. இந்த SpaceShipTwo வில் சுற்றுலாச் செல்ல இதுவரை சுமார் 250 பேர் தம்மை முன்பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மேலதிக தகவலும் தாய்க்கலம் காட்சிப்படுத்தப்பட்ட காணொளியும் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:51 am

4 மறுமொழிகள்:

Blogger துளசி கோபால் விளம்பியவை...

இப்பத்தான் எங்கூரு டிவியில் காமிச்சாங்க.

போயிட்டுவந்து பதிவு எழுதவா? :-))))

Tue Jul 29, 09:06:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி துளசி கோபால் உங்கள் கருத்துப் பகிர்வுக்கும் வரவிற்கும். :)

Tue Jul 29, 09:58:00 am BST  
Blogger CVR விளம்பியவை...

படங்கள் பெரியதாக தெரிந்தால் பதிவை படிக்க வசதியாக இருக்கும்..

ப்ளாக்கர் பதிவில் படத்தை பெரியதாக தெரிய வைப்பது எப்படி???

Wed Jul 30, 01:39:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

பக்கம் நீண்டு விடும் என்பதற்காக சிறிதாகப் படங்களைக் காண்பிக்க என்று தெரிவு செய்திருக்கிறேன்.

படங்கள் மீது அழுத்தினால் அவை பெரிதாகத் தோன்றும்..! சிரமம் தான். இருந்தாலும் பக்கம் ஓரளவு நீட்சியின்றி பேண முடிகிறது என்று நினைக்கிறேன்..!

பார்ப்போம் எதிர்காலத்தில்.. பிளாக்கர் இதனை மெருகூட்டின்.. அதாவது படத்தின் மீது கேர்சரை (cursor) அசைத்ததும் படம் பெரிதாகக் காட்டக் கூடியதாக உருவாக்கின்.. அது நன்மையாக இருக்கும். அந்த வசதி வேட்பிரஸ்.கொம்மில் இருக்கிறது.

நன்றி உங்கள் தகவல் பகிர்வுக்கும் வரவிற்கும் சி வி ஆர்.

Wed Jul 30, 03:38:00 am BST  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க