Friday, August 01, 2008

செவ்வாயில் நீர் - ஆதாரம் நிரூபிக்கப்பட்டது.



பீனிக்ஸ் கலம் செவ்வாய் மேற்பரப்பில் இருந்து, தனது தானியங்கி இயந்திரக் கரத்தைப் பயன்படுத்தி மண் மாதிரியை சேகரிக்கும் காட்சி.

கடந்த மே திங்கள் 25 இல் இருந்து செவ்வாயில் தரையிறங்கி ஆய்வு நடத்தி வரும் பீனிக்ஸ் விண்கலம் மிகச் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இருந்து செவ்வாயில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை திரட்டியுள்ளது.

இதுவரை நீராக இருக்கலாம், பனிக்கட்டியாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த விடயங்கள் தற்போது சான்றுகளுடன் பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பீனிக்ஸைக் கொண்டு செவ்வாயின் மண் மாதிரியை பரிசோதித்ததில் அதில் நீர் (உறை நிலையில்) இருப்பதற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:18 pm

8 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

அடுத்த பிளைட்டுக்கு புக்கிங் இருக்கா?
:-)

Fri Aug 01, 02:04:00 pm BST  
Anonymous Anonymous விளம்பியவை...

ungal muyarchi perum vetri adaya en vaazhthukkal

Fri Aug 01, 03:01:00 pm BST  
Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

//இதுவரை நீராக இருக்கலாம், பனிக்கட்டியாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த விடயங்கள் தற்போது சான்றுகளுடன் பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்//

செவ்வாய் நீர் மேட்டூர் நீர்தேக்கத்துக்கு நேராக இறங்குவது போல் ஒரு இணைப்புக் கொடுக்கச் சொல்லுங்க.

Fri Aug 01, 03:07:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

பிளைட் இருக்கு.. நீங்க ரெம்ப லேட்டா இருக்கிற படியால வடுவூர் குமார்.. செலவு ரெம்ப ஜாஸ்தி.. ஓகேயா உங்களுக்கு. -:))

-----------

நன்றி அனானி உங்கள் வாழ்த்துக்கு. -:)

-----------

நீங்க மேட்டூருக்கு கேட்க.. கர்நாடகக்காரங்க.. காவேரியில இருந்து விடுற தண்ணியையும் விடாம பண்ணிடப் போறாங்க.. கண்ணன். -:)))

Fri Aug 01, 04:33:00 pm BST  
Blogger dharshini விளம்பியவை...

thanni katringala......

Fri Aug 01, 05:09:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நானில்ல.. நாசா தண்ணி காட்டுது..! -:))))

Fri Aug 01, 06:19:00 pm BST  
Blogger ராஜ நடராஜன் விளம்பியவை...

நானும் இப்பவே பிளேன் டிக்கட் புக் பண்ணி வச்சிக்கிறேன்.இந்த தண்ணி மட்டும் கிடைக்கட்டும்.பக்கத்து வீட்டு கர்நாடகத்துக்கு தண்ணி காமிச்சற மாட்டேன்:)

Fri Aug 01, 11:31:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

ராஜ நடராஜன்.. உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும். ;)

Fri Aug 01, 11:51:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க