Thursday, August 07, 2008

அக்டோபரில் சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம்: இஸ்ரோ



CHANDRAYAAN - 1 சந்திரனுக்கான இந்தியாவின் முதலாவது ஆளில்லாத விண்கலம்.

சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம் (CHANDRAYAAN - 1) வரும் அக்டோபர் 2வது வாரத்தில் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.

சென்னையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் பல அறிவியல் தொழில்நுட்ப சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியா, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணி தொடங்கப்படும். விண்வெளியின் அதிக வெப்பம், அதிக குளிர் இரண்டையும் தாங்கக் கூடிய ஏற்பாடுகளை அதில் செய்வோம். இந்த பணியை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் முதல் திட்டத்தில் செயற்கை கோள் வடிவமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இது முடிவடைந்த 45 முதல் 50 நாட்களில் விண்ணில் அது ஏவப்படும். அக்டோபர் மாதம் 2வது வாரத்திற்குள் விண்கலம் செலுத்த வாய்ப்புள்ளது. ஆனால் தேதி முடிவு செய்யப்படவில்லை.

வரும் 2011-12ல் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் 2வது திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரவும், சந்திரனில் உள்ள பொருட்களின் மாதிரிகளை சேகரிக்கவும் செய்யும்.

அடுத்த மார்ச் மாதத்திற்குள் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் அனுப்பப்படும். ஜிஎஸ்எல்வியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரியோஜினிக் என்ஜின் பயன்படுத்தப்படும்.

கான்பூர் ஐஐடி, வேலூரில் உள்ள விஐடி, சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகியவை சிறிய மற்றும் மிகச் சிறிய செயற்கை கோள்களை உருவாக்க அனுமதி கேட்டுள்ளன என்றார் அவர்.

நன்றி தற்ஸ்தமிழ்.கொம்

5 ஆண்டுகளுக்கு முன்னர் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது எமது இதே வலைப்பூவில் வெளியான செய்தி இங்கு.

மேலதிக தகவல் இங்கு - விக்கிபீடியா

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:11 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விண் கோள் என்னாயிற்று ?

Thu Aug 07, 10:02:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க