Friday, August 08, 2008

கடவுளின் துகள் தேடி பரிசோதனை - முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.



நிலத்தடியில் 27 கிலோமீற்றர்கள் பரிதி கொண்ட வட்டப் பாதையில் தொடர்சியான நீண்ட மின் காந்தங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மொத்துகைக் குழாய்.

செப்டம்பர் திங்கள் 10ம் நாள் வாக்கில் CERN அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள Large Hadron Collider (LHC) இல் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ள புரோத்தன் (Proton) கற்றைகளுக்கு இடையிலான மொத்துகைக்கு ஏதுவாக புரோத்தன் கற்றைகளை 450 gigaelectronvolts (GeV) சக்திக்குரிய நிலையில் மின்காந்த முனைகளுக்கூடு பயணிக்கும் குழாய்கள் வழி பாய்ச்சும் வேலைகள் வரும் ஆகஸ்ட் திங்கள் 9 நாள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் இது இப்பரிசோதனையின் முக்கிய கட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் திங்களில் நடத்தப்படவுள்ள இறுதி மொத்துகையின் போது எதிர் எதிர் திசைகளில் புரோத்தன் கற்றைகள் 5 teraelectronvolts(TeV)(5x10^12 electronvolts)சக்தி கொண்ட நிலையில் மோதவிடப்பட இருக்கின்றன. அதற்கேற்ற வகையில் அவற்றின் சக்தி 450 GeV இல் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட இருக்கின்றன. இப்பரிசோதனையின் போது மொத்துகைக் குழாய் -217 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் பரிகரிக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. இது விண்வெளியில் ஆழ்ந்த உட்பகுதியில் உள்ள வெப்பநிலைக்கு சமனாகும்.



பரிசோதனையின் பெறுதிகளை அவதானிக்க என்று பல நுட்பமான மற்றும் சிக்கல் தன்மைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள detector களில் ஒன்று.

எதிர் எதிர் திசைகளில் அதி உயர் வேகத்தில், அதி குளிர் சூழலில் மோதவிடப்படும் புரோத்தன் கற்றைகள் மோதிச் சிதறும் வேளையில் பிறக்கும் கூறுகளில் இருந்து பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கான அடிப்படைக் கூறுகளை (கடவுளின் துகளை) அடையாளம் காண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்தப் பரிசோதனையே உலகில் மேற்கொள்ளப்படும் பிரமாண்டமான அறிவியல் குறிப்பாக பெளதீகவியல் பரிசோதனையாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:54 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க