Wednesday, August 13, 2008

மரபணு மாற்றுப் பயிர்களால் பேரழிவு காத்திருக்கிறது.



இயற்கைக்கு மாறாக உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களால் விளைச்சல் நிலங்களின் தன்மை மிக மோசமாக கெட்டு வருவதாகவும் அது சூழலுக்கு பேரழிவாக அமையக் கூடும் என்றும் இங்கிலாந்தின் இளவரசர் சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் சார்ள்ஸின் கூற்றுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த Dr Julian Little,(chairman of the Agricultural Biotechnology Council), அவர்கள் இக்கூற்றின் நம்பகத்தன்மைக்கு சரியான சான்றுகள் இல்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தமது ஆய்வுகளின் பிரகாரம் மரபணு மாற்றுப் பயிர்களால் சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் நன்மையே கிடைத்திருப்பதாகவும் கூறி இருக்கிறார்.



இளவரசர் சார்ள்ஸ்.

எதுஎப்படி இருப்பினும் உலகில் மரபணு மாற்றுப் பயிர்களால், இயற்கையான பயிர்கள் வாழ்வதற்குரிய நிலத்தின் தன்மைகள் கெடுக்கப்பட்டு வருவதாகவே பலமான குற்றச்சாட்டுக்கள் பல நாடுகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:18 pm

3 மறுமொழிகள்:

Blogger ? விளம்பியவை...

சார்லஸ் என்னமோ ஒரு நோபல் லாரெட் மாதிரி அவர் சொன்னதற்கு முக்கிய்த்துவம் கொடுத்து இப்பதிவில் வெளியிட்டுள்ளது முறைதானா?

விஞ்ஞானக் குருவியில் விஞ்ஞானச் செய்திகளை மட்டும் வெளியிடாமல் அரசியல்வாதிகள் உளறியதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டால் அவ்வளவுதான்.

இதேமாதிரி புஷ் இன்டலிஜென்ட் டிசைன் தான் சரியென்பார். இவர்களின் பினாத்தல்களை தவிர்க்கலாமே.

Wed Aug 13, 04:02:00 pm BST  
Blogger ? விளம்பியவை...

சார்லஸ் என்னமோ ஒரு நோபல் லாரெட் மாதிரி அவர் சொன்னதற்கு முக்கிய்த்துவம் கொடுத்து இப்பதிவில் வெளியிட்டுள்ளது முறைதானா?

விஞ்ஞானக் குருவியில் விஞ்ஞானச் செய்திகளை மட்டும் வெளியிடாமல் அரசியல்வாதிகள் உளறியதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டால் அவ்வளவுதான்.

இதேமாதிரி புஷ் இன்டலிஜென்ட் டிசைன் தான் சரியென்பார். இவர்களின் பினாத்தல்களை தவிர்க்கலாமே.

Wed Aug 13, 04:03:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி நந்தனவனத்தான் உங்கள் கருத்துப் பகிர்வுக்கு.

சார்ளஸ் போன்று ஒரு தொகுதி விஞ்ஞானிகளும் இதே குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். அதேவேளை பிறிதொரு தொகுதியினர் மறுத்து வருகின்றனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏனைய பயிர்களை விட அதிகம் இனவிடைப் போட்டியில் வெற்றி பெறுகின்றன என்பது பொதுவான ஒரு கருத்தாக இருப்பினும்.. அறிவியல் ரீதியாக தகுந்த சான்றுகளோடு அது நிரூபிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அதனால் தான் சார்ள்ஸ் சொன்னதையும் வெளியிட்டு.. அதற்கு எதிராக விடப்பட்ட மறுப்பையும் வெளியிட்டிருக்கிறேன்.

இச்செய்தி.. அரசியல் ரீதியான புனையப்பட்டதல்ல. அறிவியல் பார்வையோடு புனையப்பட்ட ஒன்று.

நட்புடன் குருவிகள்.

Wed Aug 13, 10:33:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க