Tuesday, August 19, 2008

மீண்டும் புரோத்தன் உந்துவாகனம் விண்ணோக்கி.



புரோத்தன் உந்துவாகனம் கசகிஸ்தானில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்து செல்லும் காட்சி.

ரஷ்சியாவின் அதி சக்தி வாய்ந்த உந்துவாகனங்களில் ஒன்றான் புரோத்தன் உந்துவாகனம் (Proton rocket) மூலம் உலகின் பெரிய வர்த்தக ரீதியான விண்கலங்களில் ஒன்றாகக் கருதத்தக்க, பிரிட்டன் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான Inmarsat-4 (I4-F3)எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தியுள்ளது.



58 மீற்றர்கள் உயரமும் 700 தொன்கள் எடையுமுள்ள புரோத்தன் உந்துவாகனம்.

சமீப ஆண்டுகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரஷ்சிய புரோத்தன் உந்துவாகனச் செலுத்துகை தற்போது பூரண வெற்றியடைந்துள்ளது. இந்த வாகனம் பல ஆண்டுகளாகவே விண்ணுக்கு மனிதன் ஆக்கும் கலங்களைக் காவிச் செல்வதில் பணிபுரிந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்சியாவின் மிர் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனப் பகுதிகள் என்று பல விண்கலங்களை அல்லது அவற்றின் பகுதிகளை விண்ணுக்குக் காவிச் சென்ற பெருமை இந்த வகை உந்துவாகனங்களைச் சாரும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:43 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

வாழ்த்துக்கள் ரஷ்சியா. விண்ணுலகின் சக்கரவர்த்தி ரஷ்சியா என்றால் மிகையல்ல.

Tue Aug 19, 07:37:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க