Tuesday, August 05, 2008

உலகில் குரங்குகள் வேகமாக அழிந்து வருகின்றன.



உலகளவில் குரங்குகள் வேகமாக அழிந்து வருகின்றன என்று ஐ யு சி என் எனப்படும், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. காடுகள் அழிக்கப்படுவது மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதன் காரணமாக குரங்குகளில் எண்ணிக்கை குறைவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.



உலகலாவிய ரீதியில் அழிவின் விளிம்பில் இருக்கும் குரங்கினங்களின் சதவீதம்.

உலகெங்கும் உள்ள 634 குரங்கினங்களில், 11 சதவீத குரங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், 22 சதவீத இனங்கள் அழிவை எதிர் நோக்கியிருப்பதாகவும் இந்த ஆய்வு கூறியுள்ளது.

ஆசியாவில் வாழும் 70 சதவீத குரங்கினங்கள் அழிவை எதிர் நோக்கியுள்ளதாக இந்த ஆய்வு கூறியுள்ளது.

காடுகள் அழிக்கப்படுவது, வேட்டையாடப்படுவது போன்ற காரணங்களுடன், மேற்குலக நாடுகளுக்கு சட்ட விரோதமாக குரங்குகள் கடத்தப்பட்டு வியாபாரம் செய்யப்படுவதும் குரங்குகளின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணம் என்று உலக சுற்றுச் சூழல் நிதியம் அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி/தமிழ்

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:21 pm

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

III:

Ithu Kusuuulen-oda Sathi velai thaan vera enna vaga irukum.

Wed Aug 06, 10:21:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

இப்பதா மனித இனம் மறுபடியும் குரங்குமாதிரி ஆகிக்கொண்டு வருதே,
ஆக பயப்பட தேவையில்லைனு நினைக்கிறேன்.

Wed Aug 06, 07:09:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அப்படி என்றீங்க..! :)))

Wed Aug 06, 11:04:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க