Tuesday, September 09, 2008

கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்.



13 ஆண்டுகள் செலவு செய்து, சுமார் 27 கிலோமீற்றர்கள் வட்டமான நிலக்கீழ் சுரக்கத்தில் அமைக்கப்பட்ட Large Hadron Collider (LHC) எனும் மொத்துகைக் குழாய் - குறுக்கு வெட்டு முகம்..

கடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல் பரிசோதனையாக அமையவுள்ள இப்பரிசோதனையின் போது நேர் ஏற்றம் கொண்ட புரோத்தன் துணிக்கைகளாலான இரண்டு கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் உச்ச வேகத்தில் சுமார் 27 கிலோமீற்றர்கள் உள்ள நிலக்கீழ் வட்டப்பாதையில் மோதவிடப்பட உள்ளன.

இந்த வட்டப் பாதை நெடுகினும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 க்கும் அதிகமான வளைய வடிவ மின் காந்தங்கள் மேற்குறிப்பிட்ட புரோத்தன் கற்றைகளை வட்டப் பாதையில் இயக்கவுள்ளன.

இந்தப் பரிசோதனையின் போது ஒரு செக்கனுக்கு 11,000 தடவைகள் என்ற விகிதத்தில் புரோத்தன் கற்றைகள் மேற்குறிப்பிட்ட 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு ஒத்த உச்ச வேகத்தில் எதிர் எதிர் முனைகளில் பயணித்து மோதவுள்ளன.

இந்த மொத்துகை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலைக்கு (கிட்டத்தட்ட -271 பாகை செல்சியஸ்)நிகர்ந்த வெப்பநிலையில் நடத்தப்படுவதோடு.. இந்த மொத்துகையினால் தோன்றும் சூழல் என்பது பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெரு வெடிப்புக்கு (Big Bang) பின்னான உடனடிச் சூழலை ஒத்ததாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்தப் பரிசோதனையில் இருந்து திணிவு என்றால் என்ன.. அந்தத் திணிவை ஆக்கும் அடிப்படை அலகு என்ன என்பதை அறியக் கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நாம் காணும் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் அவதானிப்புக்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் செப்டம்பர் திங்கள் புதன்கிழமை(10-09-2008)காலையில் இருந்து நடைபெற ஆரம்பித்துள்ள இப்பரிசோதனையானது விண்ணியல் சார்ந்து மட்டுமன்றி அடிப்படை பெளதீகம், இப்பிரபஞ்சத்தினை ஆக்கியுள்ள அடிப்படை கூறுகள், இயற்கை பற்றிய அற்புதங்கள் சிலவற்றுக்கு விடை பகரலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலதிக தகவல்கள் இங்கும்.

LHC தொடர்பான கானொளி இங்கு.

இப்பரிசோதனை தொடர்பான விக்கிபீடியா தகவல்கள் இங்கு.

CERN அமைப்பின் அதிகாரபூர்வ தளம் இங்கு.

இங்கு இடப்பட்ட இந்த விடயம் தொடர்பான முன்னைய பதிவுகளை Labels யை அழுத்தி நோக்கவும்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:18 pm

6 மறுமொழிகள்:

Blogger CVR விளம்பியவை...

எழுத்துக்கள் கருப்பு நிறத்தில் மாற்றியமைக்கு நன்றி . இப்பொழுது படிப்பதற்கு வசதியாக உள்ளது.
மிக நல்ல செய்தி.நான் வெகு ஆர்வமாக கவனித்து வரும் செய்தி.
இதை பற்றி மேலும் விவரங்கள் இங்கே
http://news.bbc.co.uk/2/hi/science/nature/7543089.stm
http://www.bbc.co.uk/radio4/bigbang/experiment.shtml

Wed Sept 10, 01:14:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றிகள் சி வி ஆர். :)

Wed Sept 10, 07:49:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

கடவுளின் துகள் தேடிப் பரிசோதனையின் முதலாவது புரோத்தன் கற்றை வெற்றிகரமாக 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் நேர்த்தியாக செலுத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பரிசோதனையில் இரண்டு புரோத்தன் கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் ஒளியின் வேகத்தில் இயங்க வைக்கப்பட்டு மோதவிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7604293.stm

Wed Sept 10, 09:53:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

வணக்கம் குருவி நலமா?
தொடர்ந்து இது பற்றிய செய்திகளை தருவதற்கு நன்றி.

Wed Sept 10, 10:15:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

வணக்கம் வசி. பரிசோதனையின் ஆரம்பக்கட்டம் பூர்த்தியாகியுள்ளது. 27 கிலோமீற்றர்கள் பரிதியுள்ள வட்டப்பாதையில் புரோத்தன் துணிக்கைகள் நிறைந்த ஒரு கற்றை வெற்றிகரமாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச வேகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் இரண்டு புரோத்தன் கற்றைகளையும் எதிர் எதிர் திசைகளில் செலுத்தி மோதச் செய்யவில்லை..! அதுவே இப்பரிசோதனையில் இருந்து புரோத்தனை ஆக்கியுள்ள உப அணுத்துணிக்கைகள் எவை என்பதைக் கண்டறிய உதவும்... என்று கூறப்படுகிறது.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7604293.stm

Wed Sept 10, 02:26:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

இப்பரிசோதனையின் பிந்திய நிலவரவப்படி.. இரண்டு புரோத்தன் கற்றைகளும் எதிர் எதிர் தசைகளில் இருந்து நேர்த்தியாக 27 கிலோமீற்றர்கள் பருதி கொண்ட LHC வழி செலுத்துவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு கற்றைகளும் இன்னும் மோதலுக்கு உட்படுத்தப்படவில்லை.

முதலாவது புரோத்தன் கற்றை வலஞ்சுழியாக
0930 BST க்கும் இரண்டாவது புரோத்தன் கற்றை இடஞ்சுழியாக 1400 BST க்கும் தனித்தனியே இயக்கப்பட்டுள்ளன்.

இரண்டு கற்றைகளையும் எப்போது மோதச் செய்வார்கள் என்று CERN இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. எனினும் குறைந்த சக்தி மொத்துகைகள் முதலில் அனுமதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7604293.stm

Thu Sept 11, 12:03:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க