Thursday, September 25, 2008

3 வது தடவையாக சீனா விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளது.



சீன உந்துவாகனம்.

சீனா மூன்றாவது முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இம்முறை, விண்வெளிக்கு செல்லும் மூவரில் ஒருவர் விண்ணில் நடக்கவும் உள்ளார்.

சீன விண்வெளி வீரர் இப்படிச் செய்யவுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சீனவுக்கு சர்வதேச மதிப்பு கிடைக்கும் என்றும் உள்நாட்டில் தேசப் பற்றும் நாட்டைப் பற்றிய பெருமிதமும் அதிகமாகும் என்றும் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நம்புகின்றனர்.

சீன ஊடகங்கள் விண்வெளி வீரர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் பல நுண்ணிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

அடுத்த 12 ஆண்டுகளுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையங்களை அமைக்கவும் நிலவில் தரையிரங்கவும் சீனா பிரம்மாண்டத் திட்டங்களை தீட்டிவைத்துள்ளது. இதன் காரணமாக சில நடைமுறை பலன்களும் இருக்கின்றன என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

தமிழ் வடிவச் செய்தி: பிபிசி/தமிழ்

மேலதிக தகவலும் கானொளியும் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:45 pm

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

உங்களது இந்தப் பதிவை இங்கே உணைத்துள்ளேன்.
http://www.thamilbest.com/

Thu Sept 25, 10:38:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றிகள் அனானிமஸ்.

Fri Sept 26, 11:52:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க