Thursday, September 04, 2008

இயற்கை வழி பிறப்பு தாய் - பிள்ளை உறவை மேம்படுத்துகிறது.



ஒரு தாய்க்கு இயற்கையான வழிமுறையில் நிகழும் குழந்தைப் பிறப்பால் அந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பு பலமடைந்து காணப்படுவதாகவும் அறுவைச் சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பு இயற்கையானதைப் போன்று பலமானதாக இருக்க பல சந்தர்ப்பங்களில் தவறிவிடுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பிறந்த குழந்தையின் அழுகுரலுக்கு அதிகம் துலங்கும் தாய்மார்களாக இயற்கையான பிறப்பைக் கொடுத்த பெண்கள் விளங்க, மற்றவர்கள் அவ்வாறு காண்பிக்கவில்லை என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

இதற்கு குழந்தைப் பிறப்பின் போது நிகழும் தாயின் யோனிமடல் சுருக்கத்தின் போது சுரக்கத் தூண்டப்படும் ஒக்சிரோஜன் எனும் ஓமோனின் சுரப்பும் அதன் மூளை மீதான தாக்கத்தின் பங்களிப்புமே அதிக காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பிக்கும் போது இயற்கையான பிறப்பின் போது ஒரு தாயில் சுரக்கத் தூண்டப்படும் அளவுக்கு ஒக்சிரோஜன் சுரப்பதில்லை என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தப் பலமான தொடர்பு தாய்மார் பிள்ளையின் தூண்டலுக்கு துலங்குவதில் மட்டுமன்றி அவர்களின் மனநிலையிலும் செல்வாக்குச் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:18 pm

2 மறுமொழிகள்:

Blogger புருனோ Bruno விளம்பியவை...

அதே நேரம், (Fetal hypoxia மற்றும் Brain Compression இல்லாததால்) அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருப்பதாகவும் சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன

Fri Sept 05, 01:46:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் தகவலுக்கும் நன்றிகள் புருனோ.

குறித்த ஆய்வுதொடர்பான இணைப்புக் கிடைத்தால் இங்கு இட்டு உதவவும்.

நன்றிகள்.

Fri Sept 05, 04:02:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க