Friday, September 05, 2008

திருவிழாக்களில் எழுப்பப்படும் ஒலி காதைச் செவிடாக்குகிறது.



அதிக ஒலி எழுப்பப்படும் திருவிழாக்களுக்கு அல்லது இசை நிகழ்வுகளுக்கு தொடர்சியாக போகின்றவர்கள் மத்தியில் காது செவிடாதல் அதிகரித்திருப்பதாக பிரித்தானிய தொண்டு நிறுவனமான Royal National Institute for the Deaf நடத்திய ஆய்வொன்று கூறுகிறது.

அதிக சத்தமிசைக்கும் திருவிழாக்களுக்குச் செல்லும் சுமார் 80% வர்களில் அவர்களின் காதின் கேள்திறனை பாதிக்கக் கூடிய எச்சரிக்கை வழங்கக்கூடிய அளவுக்கு பாதிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக சத்தத்துடன் பாடல்களை, இசைகளை கேட்பவர்கள் மத்தியிலும் இந்த நிலை காணப்படுகிறது.

குறிப்பாக இளம் வயது (26 தொடங்கி 40 வரை) ஆண்களில், ஆய்வுக்கு உட்படுத்திய சுமார் 59% பேர்களில் அதிக சத்துமுள்ள இசைகளுக்கு எதிராக அவர்களின் செவியைப் பாதுகாக்கும் செயற்பாடு குறைவாக இருந்திருப்பதுடன் அதிக சத்தத்துடனான இசையைக் கேட்பதன் மூலமாக அதே வயதை சார்ந்த சுமார் 66% தமது காதை பாதிப்படையச் செய்துவிட்டதாக உணர்வதாகவும் குறித்த ஆய்வு மேலும் கூறுகிறது.

எனவே அதிக சத்தமுள்ள இடங்களில் இருந்து விலகி இருப்பதன் மூலமும், குறைந்த அளவு சத்தத்துடன் இசையைக் கேட்டு ரசிப்பதன் மூலமும், இடைவேளை விட்டு இசையை ரசிப்பதும், வேலைத்தளங்களில் அதிக சத்தமுள்ள சூழலில் சரியான பாதுகாப்பு உபரகணங்களை அணிந்து கொண்டு வேலை செய்வதும் அதிக சத்தமுள்ள ஒலி அலைகளால் காது சம்பந்தப்பட்ட பாதிப்புக்கள் ஏற்படுவதில் இருந்து பெருமளவில் பாதுகாப்பை பெற முடியும் என்றும் குறிப்பிட்ட ஆய்வு பரிந்துரைக்கிறது.

உண்மையில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகளுக்குப் போகின்றவர்களில் வெறும் 17% பேர் மட்டுமே தமது காதைப் பாதுகாக்கும் செயற்பாடுகளைச் செய்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:19 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க