Sunday, September 21, 2008

பெருவெடிப்பு சோதனை சேதம் காரணமாக நிறுத்தம்.



உப அணுத்துணிக்கையான புரோத்தனை உடைத்து நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டிருந்த பெருவெடிப்புச் சோதனை Large Hadron Collider இல் ஏற்பட்ட பாரிய கோளாறு காரணமாக பல மாதங்களுக்கு பிற்போடப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது.

குறிப்பாக அதி குளிரை பரிகரிக்க உதவும் கீலியம் கொண்ட காந்தங்களில் ஏற்பட்ட பாரிய கசிவு அல்லது சேதம் காரணமாக Large Hadron Collider இன் ஒரு பகுதி தற்காலிகமாக செயற்படுவதிலின்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல தொன் எடையுள்ள கீலியம் கசிந்து வெற்றிடமாக இருக்க வேண்டிய மொத்துகை குழாயினை அடைந்துள்ளதால் அங்கு தற்போது வெற்றிடம் என்பது இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இது இப்பரிசோதனையை செய்வதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக தகவல் இங்கு. Large Hadron Collider காணொளியும் உண்டு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:55 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க