Friday, September 26, 2008

ஜெட் மனிதன் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை.



தனி மனிதன் ஜெட் இயந்திரம் பொருத்தப்பட்ட இறக்கையைக் கட்டிக் கொண்டு உச்ச அளவாக 125 மைல்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் 10 நிமிடத்தில் 34.5 கிலோமீற்றர்கள் நீளமான ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளான்.

இச்சாதனையைச் செய்த மனிதன் சுவிஸ்லாந்து நாட்டு இராணுவத்தைச் சேர்ந்த 48 வயதான Yves Rossy ஆவார்.



சாதனையாளன் பறப்பில் ஈடுபட்ட இடங்களும் தூரமும்.

விமானம் ஒன்றின் உதவியுடன் 2500 மீற்றர்கள் உயரம் வரை கொண்டு செல்லப்பட்ட இவர் அங்கிருந்து விண்ணில் குதித்து தனது ஜெட் இயந்திரம் பொருத்தப்பட்ட இறக்கைகளைப் பயன்படுத்தி பிரான்சில் இருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து இங்கிலாந்தின் Dover என்ற இடத்தில் பரசூட்டின் உதவியுடன் தரையிறங்கியுள்ளார்.

மேலதிக விபரங்களும் கானொளியும் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:01 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க